வைக்கோல் ஏற்றி வந்த லாரி தீயில் கருகியது

வேப்பூர்: விருத்தாசலம் அடுத்த கச்சிபெருமாநத்தத்தை சேர்ந்தவர் சிவசங்கரமூர்த்தி, 41; இவர், நேற்று வேப்பூர் அடுத்த மேமாத்துாரில், 70 வைக்கோல் கட்டுகளை ஈச்சர் லாரியில் ஏற்றி கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில், நேற்று பகல் 1:30 மணியளவில் எம்.புதுார்- மேமாத்தூர் சாலையில் ரயில்வே கேட் அருகே வந்த போது, திடீரென வைக்கோல் கட்டுகள் தீப்பிடித்து எரிந்தன. இதனையறிந்த சிவசங்கரமூர்த்தி லாரியிலிருந்து குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தகவலறிந்து வந்த வேப்பூர் மற்றும் மங்கலம்பேட்டை தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

இதில், லாரி முற்றிலும் எரிந்து கருகியது. இது குறித்து வேப்பூர் போலீசார் விசாரிக் கின்றனர்.

Advertisement