குப்பையில் கிடந்த 15 சவரன் நகை: போலீசிடம் ஒப்படைத்த தூய்மைப்பணியாளரின் நேர்மைக்கு குவியுது பாராட்டு
காரைக்குடி: குப்பையில் கிடந்த 15 சவரன் நகையை போலீசில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர். உரிமையாளர் 20 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கி கவுரவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காட்டுத் தலைவாசல் பகுதியை சேர்ந்தவர் டார்ஜிலின். டிராவல்ஸ்நடத்தி வருகிறார். வீட்டில் இருந்த 15 சவரன் நகையை எடுத்த குழந்தை தெரியாமல் குப்பை தொட்டியில் போட்டது. அதனை துப்புரவு பணியாளர் சேகரித்து சென்றார்.
குப்பையை செல்வி என்ற தூய்மைப் பணியாளர் தரம் பிரிக்கும்போது நகைகள் இருந்தது தெரியவந்தது. அது யாருடையது என்பது தெரியாத காரணத்தினால், அதனை காரைக்குடி வடக்கு போலீஸ் ஸ்டேசனில் ஒப்படைத்தார். விசாரணையில் அந்த வகை டார்ஜிலினுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.
இதனையடுத்து நகையை காரைக்குடி ஏஎஸ்பி ஆஷிஷ் புனியா முன்னிலையில் போலீசார் அவரிடம் ஒப்படைத்தனர். நகையை போலீசிடம் ஒப்படைத்த செல்விக்கு போலீசாரும், உரிமையாளரும் பாராட்டு தெரிவித்தனர். மேலும் டார்ஜிலின், செல்விக்கு ரூ.20 ஆயிரம் ரொக்கப்பரிசு வழங்கினார்.
கமென்ட் செய்யுங்க வாசகர்களே!
துாய்மைப்பணியார்செல்வியின் நேர்மைக்கு பாராட்டு தெரிவித்து கமென்ட் செய்யுங்க வாசகர்களே!
இதே- தொடர்சம்பவங்கள் - எங்கேயோ இடிக்குதே?
அது என்ன தொலைந்துபோகும் நகைகள் எல்லாம் தூய்மை பணியாளர்கள் கையிலேயே கிடைக்கிறது. அவர்கள் மனது தூய்மையாக இருப்பதால் அவர்கள் அதை தாங்களே வைத்துக்கொள்ளாமல் போலீஸ் மூலமாக தொலைத்தவர்களுக்கு கிடைக்கச்செய்கிறார்கள். அவர்கள் தூய்மை மனமுடையவர்கள். வாழ்க அவர்கள் குலம்.
வாழ்க வளமுடன் , நலமுடன்
குப்பையில் தங்கம் போடும் அளவிற்கு நம் மக்களின் தரம் உயர்திருக்கு இல்ல அந்த அளவிற்கு பொறுப்பின்மை...
நேர்மைக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் கடவுள் உங்கள் நேர்மைக்கு ஆசீர்வதிப்பார் தோழி வர வர மக்களுக்கு தங்கத்தின் மீது அஜாக்கிரதை அதிகமாகிக் கொண்டே வருகிறது இது அடிக்கடி நடக்கிறது எல்லோரும் நல்லவர்களாக இருக்க மாட்டார்கள்
God bless her. The poor are usually honest.
same incident happened recently and gold credited by super star.
அடிக்கடி இது போல நடக்குது
தங்கம் விற்கும் விலயல
காரணம் என்ன?
correct. happening often. some suspense? why people are throwing gold of late oftenமேலும்
-
கச்சா எண்ணெய் தட்டுப்பாடு மூடப்பட்டது எம்.ஆர்.பி.எல்., ஆலை
-
ஜாதிபத்திரி விலை கிடுகிடு கிலோவுக்கு 150 ரூபாய் உயர்வு பொள்ளாச்சியில் அதிகபட்ச விலை
-
தொழிற்கடன் பெறுபவர்களில் 50 சதவீதம் பேர் மகளிர்' ஆய்வில் தகவல்
-
பீஹாரின் அடுத்த முதல்வர்... யார்? : சூடுபிடித்தது அரசியல் களம்: அதிருப்தியில் தொண்டர்கள் ஆவேசம்
-
நாங்குநேரியை தொடர்ந்து இடைக்காட்டூர் பட்டியலினத்தவர்கள் மீது கொடூர தாக்குதல் 9 பேர் மீது வழக்கு; 5 பேரை கைது செய்தது போலீஸ்
-
கோவில் நிலம் தொடர்பான வழக்குகளை கையாளும் சிவில் நீதிமன்றங்கள் 6 மாதத்தில் தீர்வு காண வேண்டும்