கச்சா எண்ணெய் தட்டுப்பாடு மூடப்பட்டது எம்.ஆர்.பி.எல்., ஆலை
புதுடில்லி கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலையை, மங்களூரு சுத்திகரிப்பு ஆலையான எம்.ஆர்.பி.எல்., மூடியுள்ளது.
பொதுத்துறை நிறுவனமான எம்.ஆர்.பி.எல்., நாள் ஒன்றுக்கு மூன்று லட்சம் பேரல் கச்சா எண்ணெய் சுத்திகரிக்கும் திறன் கொண்டது.
இஸ்ரேல், ஈரான் போர் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு, கப்பல் போக்குவரத்து முடங்கியதால், கச்சா எண்ணெய் தட்டுப்பாடு அபாயம் நிலவுகிறது. இதனால், ஒரு லட்சம் பேரல் சுத்திகரிக்கும் ஆலை பிரிவை மங்களூரு சுத்திகரிப்பு நிறுவனம் மூடியுள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டால் சீனாவிலும் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலைகள் மூடப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே, ரஷ்யா -- உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை கடந்த ஆண்டு இந்நிறுவனம் நிறுத்தியது.
இதனால், உள்நாட்டு தேவைக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெளிநாடுகளுக்கான பெட்ரோலிய ஏற்றுமதியை அந்நிறுவனம் ரத்து செய்துள்ளது.
மேலும்
-
ஈஷா மண் காப்போம், கே.பி.ஆர் கல்லூரி இணைந்து நடத்தும் 'வீட்டிலிருந்தே வருமானம் சாத்தியம் 2.O' கருத்தரங்கு
-
ஈரானின் டிரோன் தாங்கி கப்பல் மீது தாக்குதல்; வீடியோ வெளியிட்டது அமெரிக்கா
-
“மேட் இன் பாரத்” என்றால் உலகிலேயே மிகச்சிறந்தது என்ற நிலையை உருவாக்க வேண்டும்
-
ஈஷாவின் எரிவாயு மயானம் “ஓர் புனிதமான நற்பணி” என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பாராட்டு!
-
ஈஷா காவேரி கூக்குரல் வழிகாட்டுதலில் தி.மலை மாவட்டத்தில் 'ஒரு கிராமம் ஓர் அரசமரம்' திட்டம்!
-
ஐடி முதல் தடய அறிவியல் வரை; பழங்குடியின மாணவர்களின் கல்விச் செலவை ஏற்று வழிநடத்தும் ஈஷா!