மானாமதுரையில் கைதி உயிரிழப்பு; உறவினர்கள் சாலை மறியல்

2


மானாமதுரை: மானாமதுரையில் போலீசார் துன்புறுத்தியதில் கைதி ஆகாஷ் இறந்ததாக கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற அரிவாள் வெட்டு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பட்டியல் இனத்தைச் சேர்ந்த ஆகாஷ் டெலிசன் 26, போலீசாரிடம் இருந்து தப்பிய போது கீழே விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு பலியானார்.

இதனைத் தொடர்ந்து அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் போலீசார் தாக்கியதால் தான் இறந்துவிட்டதாக கூறி மதுரை, ராமேஸ்வரம் நான்கு வழி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நான்குவழிச் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Advertisement