ஈரோட்டில் கே.பி.சுந்தராம்பாள் சிலை திறப்பு
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த சுதந்திரப் போராட்ட வீராங்கனை பழம்பெரும் நடிகை மற்றும் பாடகியுமான கே.பி.சுந்தராம்பாள் திருவுருவ சிலையை முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக திறந்து வைத்தார்.
ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் 1908ம் ஆண்டு கே.பி.சுந்தராம்பாள் பிறந்தார். கலைத்துறையில் பல சாதனைகளை செய்த இவர், கடந்த 1980ம் ஆண்டு சென்னையில் காலமானார். இவரது சொந்த ஊரில் திருவுருவ சிலையை நிறுவ கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் மகளிர் தினமான இன்று கொடுமுடியில் 6.5 அடி உயரமுள்ள திருவுருவ வெண்கல சிலையை முதல்வர் ஸ்டாலின் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக திறந்து வைத்தார். இதற்கு கே.பி.சுந்தராம்பாள் வாரிசுகள் முதல்வர் ஸ்டாலின் மற்றும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொண்டனர்.
வாசகர் கருத்து (2)
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
08 மார்,2026 - 22:05 Report Abuse
முதல்வர் மாபெருந்தவறை செய்துவிட்டார் இந்த அம்மையாருக்கு சிலை வைக்குமிடத்தில் தோப்பனார் கலைஞர் சிலையை அல்லவா வைத்திருக்க வேண்டும் இன்றுமுதல் அங்கே மக்கள் தர்ணா ஆர்ப்பாட்டம் கலைஞருக்கும் சிலை அங்கே வைத்தால்தான் மக்கள் நிம்மதியாக வாழ முடியுமாம் 0
0
Reply
Chinnappan Arulappan - ,இந்தியா
08 மார்,2026 - 20:03 Report Abuse
சந்தோஷம் 0
0
Reply
மேலும்
-
3ம் நாளாக தொடரும் மறியல்: மதுரை ராமேஸ்வரம் 4 வழிச்சாலையில் போக்குவரத்து கடும் பாதிப்பு
-
வருத்தம் தெரிவித்திருக்க மாட்டேன்; திரிஷாவால் விஜய்க்கு பாதிப்பு: பார்த்திபன் புதிய வீடியோ வெளியீடு
-
மேற்காசிய நிலவரம்; ரஷ்ய அதிபரிடம் போனில் விவாதித்தார் டிரம்ப்
-
தேசிய கீதம் பாட மறுத்த ஈரான் கால்பந்து வீராங்கனைகள் 5 பேருக்கு ஆஸி., விசா
-
எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்: உள்நாட்டு பயன்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்க மத்திய அரசு உத்தரவு
-
ஈரான் மீது இதுவரை இல்லாத வகையில் 20 மடங்கு தாக்குதலை தொடுப்போம்: டிரம்ப் எச்சரிக்கை
Advertisement
Advertisement