மேற்காசியாவில் நிலவும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும்: சீனா வலியுறுத்தல்

5


பீஜிங்: ''ஈரான்- அமெரிக்கா, இஸ்ரேல் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்'' என சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார்.


ஈரான் முழுவதும் இஸ்ரேல், அமெரிக்க ஏவுகணைத் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. பதிலுக்கு ஈரானும், மேற்காசியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை தாக்கி வருகிறது. போர் 9வது நாளாக இன்றும் தொடர்ந்த நிலையில், பதற்றமான சூழல் நீடித்து வருகிறது. இது குறித்து, சீனாவில் தலைநகர் பீஜிங்கில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் வாங் யீ கூறியதாவது:

ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய தாக்குதலால் ஏற்பட்ட போர் ஒருபோதும் நடந்திருக்க கூடாது. ஈரான்- அமெரிக்கா, இஸ்ரேல் போர் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். போரை நிறுத்தி உடனடியாக சுமுகமான பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும். உலகம் காட்டாட்சி ராஜ்ஜியத்திற்கு திரும்ப கூடாது.


இந்த ஆண்டு சீன-அமெரிக்க உறவுகளுக்கு உண்மையிலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். சீனாவுடனான வேறுபாடுகளை அமெரிக்கா களைந்து கொள்ள வேண்டும். சிக்கலான சர்வதேச சூழலுக்கு மத்தியில், சீனா-ரஷ்யா உறவுகள் உறுதியாகவும் அசைக்க முடியாததாகவும் உள்ளன. இவ்வாறு வாங் யீ தெரிவித்தார்.

Advertisement