தி.மு.க., கூட்டணியை பார்த்து பழனிசாமிக்கு பொறாமை காங்கிரஸ் செயலர் கருத்து
நாமக்கல்: “காங்., -- தி.மு.க., கூட்டணியை பார்த்து, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பொறாமையில் இருக்கிறார்,” என, அகில இந்திய காங்., செயலர் நிவேதித் ஆல்வா கூறினார்.
நாமக்கல் கிழக்கு மாவட்ட காங்., கட்சி அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது. அலுவலகத்தை, அகில இந்திய காங்., செயலர் நிவேதித் ஆல்வா, திறந்து வைத்து, கட்சியில் சேர்ந்த புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பா.ஜ., - அ.தி.மு.க., கூட்டணியில் பல்வேறு பிரச்னைகள் இருக்கின்றன.
இதனால், மற்ற கட்சியிலும் பிரச்னைகள் வர வேண்டும் என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி விரும்புகிறார்.
வரும் சட்டசபை தேர்தலுக்கு தி.மு.க.,வுடன் சுமுகமாக பேச்சு நடத்தி, காங்கிரசுக்கு 28 தொகுதிகளை பெற்றுள்ளோம். எங்களுக்குள் எந்த குழப்பமும் இல்லை. இதனால், எங்கள் கூட்டணியை பார்த்து, பழனிசாமி பொறாமையில் இருக்கிறார்.
திறமையாக செயல்படும் இளைஞர்களுக்கு, சட்டசபை தேர்தலில், காங்., சார்பில், 'சீட்' வழங்கப்படும். அதே நேரம், அனுபவம் வாய்ந்தவர்களை ஒதுக்காமல், அவர்களுக்கும், 'சீட்' வழங்கப்படும்.
இவ்வாறு கூறினார்.
மேலும்
-
மண்ணைக் காக்க பெண்கள் அதிகளவில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட வேண்டும்!
-
கொசுவர்த்தியால் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலி
-
டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசு அறிவித்தது பிசிசிஐ
-
சிலிண்டர் தட்டுப்பாடு: பதுக்கல் தடுக்க அத்தியாவசிய பொருட்கள் சட்டம் அமல்
-
நீதித்துறை குறித்த பள்ளி பாடப்புத்தகம் வாபஸ்; மன்னிப்பு கோரியது என்.சி.இ.ஆர்.டி.,
-
கரூர் நெரிசல் சம்பவம்: மார்ச் 17ல் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகிறார் செந்தில் பாலாஜி