கரூர் நெரிசல் சம்பவம்: மார்ச் 17ல் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகிறார் செந்தில் பாலாஜி
நமது நிருபர்
கரூர் சம்பவம் தொடர்பான வழக்கில் மார்ச் 17ம் தேதி சிபிஐ விசாரணைக்கு செந்தில்பாலாஜி ஆஜராகிறார். அவர் சம்மன் வந்துள்ளது என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
கரூரில், த.வெ.க., தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில், நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியான சம்பவத்தின் பின்னணியில், தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி இருப்பதாக, சி.பி.ஐ., அதிகாரிகளிடம் த.வெ.க.,வினர் புகார் அளித்தனர். டில்லியில் உள்ள சி.பி.ஐ., அலுவலகத்தில், செந்தில் பாலாஜி நேற்று ஆஜராக, 'சம்மன்' அனுப்பப்பட்டு இருந்தது.
ஆனால், அந்த சம்மனை, செந்தில் பாலாஜியோ, அவரது அலுவலக ஊழியர்களோ பெறவில்லை. செந்தில் பாலாஜிக்கு 'இ - மெயில்' வாயிலாகவும், 'சம்மன்' அனுப்பப்பட்டது. அதற்கும், செந்தில் பாலாஜி தரப்பில் பதில் அளிக்கப்படவில்லை. சம்மனை ஏற்று விசாரணைக்கும் ஆஜராகவில்லை. இதனால், செந்தில் பாலாஜிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப, சி.பி.ஐ., அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக, தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் இன்று (மார்ச் 10) சமூகவலைதளத்தில் சம்மன் வந்துள்ளது என செந்தில்பாலாஜி பதிவிட்டு இருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ சம்மன் அனுப்பியது குறித்து, முன்னுக்கு பின் முரணாக சில ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் மார்ச் 17ம் தேதி நேரில் வந்து விளக்கமளிக்குமாறு சி.பி.ஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில், அவர்களது கேள்விகளுக்கு நேரில் சென்று உரிய விளக்கங்களை அளிக்க உள்ளேன்'' என குறிப்பிட்டுள்ளார்.
கொள்ளையடித்து வேலைவாங்கித்தரேன் என்று லஞ்சம் வாங்கிய வழக்குகளுக்கே நான் பயப்படலே. முகாந்திரமேயில்லாத இந்த கரூர் சம்பவத்துக்கா நான் மாட்டுவேன். Never..
கரூர்ல தமிழக வெற்றி கழகம் மாநாட்டுல ஏற்பட்ட கூட்ட நெரிசல் விபத்துக்கு நீ எதுக்கு visaaranaikkun un wanted ஆஜர் ஆகிற. உன் முதலாளி எதாவது குட்டையை குழப்ப சொல்லி உன்ன அனுப்பறாரா. இந்த ஆளை விசாரணைக்கு அனுமதிப்பது தவறு. சம்பந்தமில்லாத ஆளு.
சம்மனை மெயிலிலும் போஸ்டிலுமா அனுப்புவது.. இது என்ன மரியாதை. திமுகவினர் சிபிஐக்கு அவ்வளவு இளக்காரமானவர்களா ஆகிவிட்டார்களா? அதான் வரவில்லை விசாரணைக்கு. வெற்றிலை, பாக்கு, பழம், பூமாலை, மேளதாளங்களுடன் நேரில்வந்து அல்லவா சம்மனைக்கொடுக்கவேண்டும். அதுதானே மரியாதை.. இனிமேல் அப்படிசெய்யாதீர்கள்..
திமுக காவல் துறை வசனம் கைது செய்து விட்டு கோர்ட்டில் பார்த்து கொள்ளுங்கள் என்று சொல்லி விடுவார்கள்.
அது போல செந்தில் பாலாஜியை கைது செய்து சொல்ல வேண்டும்.
அப்படியே குறுக்கும் மடுக்குமாக ஆம்புலன்ஸ் ஒட்டிய நாதாரிகளையும் கூப்பிடுங்க
சிபிஐ அலுவலர்கள் காட்டில் /வீட்டில் பண மழை . Comedy bafoons of india
அய்யகோ என்ன ஒரு ஆங்கில புலமை. உங்களை பார்த்து பூலாங்கிதம் அடைகிறேன் .
என்ன அடைகிறார் ?
அரசியலில் யாரும் யோக்கியன் இல்லை
எலேச்டின் நேரத்தில் செந்தில்பாலாஜியை பணி செய்யவிடாமல் தடுப்பதுதான் bjp நோக்கம். அதர்க்கு CBI, ED போன்ற dept. தவறாக use பன்றார் மோடியும், அமித்சா வும் நேர்மையாய் தேர்தலை சந்திக்க பயம் அவர்களுக்கு எனவே குறுக்கு வழியில் வெல்ல பார்க்கிறார்கள் இங்குள்ள மக்கள் குஜராத் போல அல்லது பிஹாரி அல்ல அரசியல் தெரிந்தவர்கள் பிஜேபி கு ஆப்பு அடிக்க தயாராக உள்ளார்கள்
பாவம் புலம்பல், புலம்பல், புலம்பலோ புலம்பல்.
அடக் கெரகமே! எங்க மண்மோகன் காலத்துலே இருக்கிர எடந் தெரியாமே கிடந்தாங்க. இப்ப என்ன இந்த ஆட்டம் ராங்கா ஆடராங்க. கப்பல் சிப்பலு இதுக்காகவே காத்துட்டு இருக்காறு.சும்மா கிழி கிழின்னு கிழீச்சிடுவாரு.
அங்கு என்ன நடந்தது என்பது கடவுளுக்கு மட்டுமே வெளிச்சம். அரசியல் விளையாட்டுகளில் அப்பாவி மக்கள், குழந்தைகள் சினிமா மோகத்தில் விட்டில் பூச்சிகளாக இறந்தது வருத்தம்.
ஒரு பிக்பாக்கெட் அடிப்பவரையே மக்கள் கைகளில் சிக்கினால் நையப்புடைத்து அனுப்பும் நிலையில், தேச விரோத மக்கள் பணம் கொள்ளையடித்த, இன்னும் கொலை கற்பழிப்பு போன்ற கடும் குற்றங்களிழைத்த குற்றவாளிகளை துரித நிலையில் வழக்குகளை முடித்து தீவிர தண்டனைகள் கொடுக்காமல், காலம் தாழ்த்தி ஜாமினில் பவனி வரவிட்டு மேலும் குற்றங்கள் புரியச்செய்வது நியாயமா?மேலும்
-
விமானப்படை தாக்குதலில் புதிய ஆட்சியாளரான கமேனியின் மகன் கொல்லப்பட்டு இருக்கலாம்; அமெரிக்கா தகவல்
-
தகுதியுள்ள எந்த வாக்காளரின் பெயரும் நீக்கப்படாது; தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் உறுதி
-
காஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாட்டால் ஹோட்டல்கள் மூடல்: அம்மா உணவகங்களை திறக்க இபிஎஸ் கோரிக்கை
-
காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை; அண்ணாமலை பேட்டி
-
திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகள் கேட்கும் மார்க்சிஸ்ட்!
-
மண்ணைக் காக்க பெண்கள் அதிகளவில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட வேண்டும்!