இதே நாளில் அன்று
மார்ச் 10: திருவாரூர் மாவட்டம், குழிக்கரை கிராமத்தில், பெருமாள் பிள்ளை -- கமலாம்பாள் தம்பதியின் மகனாக, 1913ல் பிறந்தவர் காளிதாஸ் பிள்ளை.
இசைக் குடும்பத்தில் பிறந்த இவர், இளமையில் தன் தாத்தா அய்யாஸ்வாமி பிள்ளையிடமும், தந்தை பெருமாள் பிள்ளையிடமும், தொடர்ந்து, திருவாரூர் சுவாமிநாத பிள்ளையிடமும் நாதஸ்வர இசையை கற்றார்.
குழிக்கரை பிச்சையப்பா பிள்ளையுடன் கச்சேரிகளில் வாசித்தார். பின், தனியாக வாசித்த போது, ஒரே ராகத்தில் பல மணி நேரம் ஆலாபனை செய்து புகழ் பெற்றார்.
ஒருமுறை திருச்செந்துார் கோவிலில், நடபைரவி ராகத்தை இரவில் வாசிக்க துவங்கி, விடிந்தும் முடியாததால், மறுநாள் இரவு மீண்டும் விட்ட இடத்தில் இருந்து வாசித்து சாதனை படைத்தார். கடினமான பல்லவிகளை வாசிப்பதில் இவர் கையாண்ட நுட்பங்களை, 'காளிதாஸ் பல்லவி' என்றே சக கலைஞர்கள் புகழ்ந்தனர்.
பல நாதஸ்வர கலைஞர்களை வளர்த்த இவர், தன் 60வது வயதில், 1973ல், இதே நாளில் மறைந்தார்.
இவரது நினைவு தினம் இன்று!
மேலும்
-
மண்ணைக் காக்க பெண்கள் அதிகளவில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட வேண்டும்!
-
கொசுவர்த்தியால் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலி
-
டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசு அறிவித்தது பிசிசிஐ
-
சிலிண்டர் தட்டுப்பாடு: பதுக்கல் தடுக்க அத்தியாவசிய பொருட்கள் சட்டம் அமல்
-
நீதித்துறை குறித்த பள்ளி பாடப்புத்தகம் வாபஸ்; மன்னிப்பு கோரியது என்.சி.இ.ஆர்.டி.,
-
கரூர் நெரிசல் சம்பவம்: மார்ச் 17ல் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகிறார் செந்தில் பாலாஜி