எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்: உள்நாட்டு பயன்பாட்டிற்கு முன்னுரிமை அளிக்க மத்திய அரசு உத்தரவு
நமது நிருபர்
மேற்கு ஆசியாவில் நடந்து வரும் மோதல்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு மத்தியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தற்போதைய புவிசார் அரசியல் ரீதியாக எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் மற்றும் எல்பிஜி விநியோகத்தில் உள்ள தடைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு அதிக எல்பிஜி உற்பத்தி செய்ய வேண்டும்.
முக்கியமாக கூடுதலாக உற்பத்தி செய்வதை உள்நாட்டு எல்பிஜி பயன்பாட்டிற்குப் பயன்படுத்த அமைச்சகம் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. வீடுகளுக்கு உள்நாட்டு எல்பிஜி விநியோகத்திற்கு அமைச்சகம் முன்னுரிமை அளித்துள்ளது. பதுக்கல் மற்றும் பிளாக்கில் அதிக விலைக்கு விற்பனை செய்வதை தவிர்க்க 25 நாட்கள் முன்பதிவு காலத்தை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட எல்பிஜியிலிருந்து மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் போன்ற துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றன. உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் பிற வீட்டு உபயோகம் அல்லாத துறைகளுக்கு எல்பிஜி விநியோகத்தின் உற்பத்தியை மறுஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து (6)
gopalakrishnan - ,
10 மார்,2026 - 11:44 Report Abuse
ஈரான் அமெரிக்கா போரினால் ஏற்பட்டுள்ள, இந்த எரிசக்தி குளறுபடி தீரும் வரையில், கோவிட் சமயம் இருந்த கட்டுப்பாடுகளை போல ஒரு கடுமையான பொருளாதார அவசரநிலை பிரகடனம் செய்து, கட்டுப்பாடு இல்லாமல் வாய்க்குவந்தபடி பேசி திரியும் இந்த அர்பன் நக்சல்களை அடக்கிவைக்க வேண்டும். ரவுடித்தனம் செய்யும் MP சம்பளம், அவர்களின் வானளாவிய வசதிகள், பென்ஷன் முதலியவற்றை ரத்து செய்ய வேண்டும். 0
0
Reply
Sundar R - ,இந்தியா
10 மார்,2026 - 10:17 Report Abuse
Eventhough we have a gas lighter, we keep a match-box as a substitute.
Eventhough our Central Government is taking immediate steps and enough care to mitigate this transitory issue, keeping Induction stove will prove to be an native ion. 0
0
Reply
Mahesh Rajan - ,
10 மார்,2026 - 09:25 Report Abuse
உலகின் மிகப்பெரிய பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம் (ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையம்) நமது பாரதத்தில் உள்ளது. நம் நாட்டில் இதுபோன்ற மற்றொரு சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவுவது பற்றி நாம் சிந்திக்க வேண்டும். எதுவும் சாத்தியமற்றது அல்ல. வந்தேமாதரம்.
ஆயுதம் செய்வோம்,
நல்ல காகிதம் செய்வோம்
ஆலைகள் வைப்போம், கல்விச் சாலைகள் வைப்போம்
ஓயுதல் செய்யோம்,
தலை சாயுதல் செய்யோம்
உண்மைகள் சொல்வோம், பல வண்மைகள் செய்வோம்.
குடைகள் செய்வோம்,
உழு படைகள் செய்வோம்
கோணிகள் செய்வோம், இரும்பாணிகள் செய்வோம்
நடையும் பறப்பு முணர் வண்டிகள் செய்வோம்
ஞாலம் நடுங்க வரும் கப்பல்கள் செய்வோம்.
மஹாகவி பாரதியார். 0
0
Reply
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
10 மார்,2026 - 08:55 Report Abuse
முதலில் இந்த வரைமுறையற்ற தொலைக்காட்சி/ ஓடிடி ஆகிய குப்பைகளை கடும் கட்டுப்பாடுகள் மூலம் அடக்கி வைக்க வேண்டும். சிங்கப்பூர் மற்றும் மலேசியா போல ஒருநாளைக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் 5 மணி நேரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். சீனா/ ரஷ்யா போல நடிகர் நடிகைகளை வேறு உருப்படியான வேலை பார்க்க செய்யவேண்டும். தானும் உருப்படாமல் ஊரையும் உருப்பட விடாமல் கெடுக்கும் திரைப் பட படைப்பாளிகள் என்ற காவாலி கும்பல் இந்த தேசத்துக்கு தேவையில்லை.... 0
0
Reply
Iyer - Karjat,இந்தியா
10 மார்,2026 - 08:14 Report Abuse
ஒரு வேளை சமைக்காத காய்கறி பழ உணவை சாப்பிட்டு பழகு. LPG ன் விலை 50% குறைந்து போகும்.
ஒரு வேளை சமைக்காத காய்கறி பழ உணவை சாப்பிட்டு பழகு. எந்த வியாதியும் உன்னை அண்டாது. 0
0
R S BALA - CHENNAI,இந்தியா
10 மார்,2026 - 08:35Report Abuse
ஐயரு...இன்னொரு ரோசனைகூட சொல்றேன் கேளு..இந்த தென்னமட்டை தேங்காமட்டை பனைமட்டை சுள்ளி முள்ளு எல்லாம் பயன்படுத்தாம வீணாக போகுது குப்பையில அத பயன்படுத்தலாம் கிராமங்களில் , நகரவாசிக்கு மட்டும் இந்த LPG விநியோகிக்கலாம் பிரச்சனை தீரும் வரை. 0
0
Reply
மேலும்
-
விமானப்படை தாக்குதலில் புதிய ஆட்சியாளரான கமேனியின் மகன் கொல்லப்பட்டு இருக்கலாம்; அமெரிக்கா தகவல்
-
தகுதியுள்ள எந்த வாக்காளரின் பெயரும் நீக்கப்படாது; தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் உறுதி
-
காஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாட்டால் ஹோட்டல்கள் மூடல்: அம்மா உணவகங்களை திறக்க இபிஎஸ் கோரிக்கை
-
காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை; அண்ணாமலை பேட்டி
-
திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகள் கேட்கும் மார்க்சிஸ்ட்!
-
மண்ணைக் காக்க பெண்கள் அதிகளவில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட வேண்டும்!
Advertisement
Advertisement