காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை; அண்ணாமலை பேட்டி

18

சென்னை: காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. மிக விரைவில் இயல்புநிலைக்கு வரும் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.


காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து, நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அண்ணாமலை அளித்த பதில்: சிலிண்டரை பொறுத்தவரை நமக்கு வரும் எல்பிஜி பெரும்பாலும் சவுதி அரேபியாவில் இருந்து வருகிறது. போர் ஆரம்பித்த பிறகு,ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடி வைத்துள்ளதால் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.


எந்த கப்பலும் வெளியே வர முடியாத அசாதாரண சூழ்நிலை இருக்கிறது. பல இடங்களில் பெட்ரோலிய உற்பத்தி பொருட்களை மத்திய அரசு வாங்கினாலும் கூட, ஆனால் எல்பிஜி காஸ் சவுதியில் இருந்து அதிகமாக வருகிறது.

25 நாட்கள்




மிக விரைவில் ஹார்முஸ் ஜலசந்தி பகுதி இயல்பு நிலைக்கு வந்த பிறகு, கப்பல்கள் வர ஆரம்பிக்கும். வணிக சிலிண்டர் புக் செய்ய வேண்டும் என்றால் 21 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும். போருக்கு பிறகு இதனை மத்திய அரசு 25 நாட்களாக உயர்த்தி இருக்கிறது.


வீட்டிற்கு தேவையான காஸ் சிலிண்டர் தடையில்லாமல் வர வேண்டும். அதேபோல் நாம் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் இடைஞ்சல் இல்லாமல் வர வேண்டும். நிச்சயமாக விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும்.

இயல்புநிலை




தற்போது காஸ் பயன்பாடு பல மடங்கு உயர்ந்து இருக்கிறது. 60 சதவீதம் நாம் இறக்குமதி செய்து தான் மக்களுக்கு பெட்ரோலியம் பொருட்கள் கொடுத்த கொண்டு இருக்கிறோம். மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை. மிக விரைவில் இயல்புநிலைக்கு வரும்.


எல்லா பிரச்னைக்கும் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுத்துக்கொண்டு இருக்கிறது. காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு என பொதுவெளியில் தேவையில்லாத அச்சத்தை, பயத்தை யாரும் ஏற்படுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறேன். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

சாட்சியம்




சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிரான அவதூறு வழக்கில் சாட்சியம் அளித்தபின் அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். பாஜ சார்பில் மக்களுக்கான நிவாரண உதவி மற்றும் ஆறுதல்கள் எல்லாம் அந்த நேரத்தில் தெரிவித்து இருந்தோம்.


ஆர்எஸ்பாரதி நிருபர்கள் சந்திப்பில், கள்ளக்குறிச்சி விஷசாராய திட்டத்திற்கு நான் சதி திட்டம் தீட்டியதாகவும், இந்த சம்பவத்தில் பாஜ சம்பந்தப்பட்டிருப்பதாகவும் சொல்லி இருந்தார். இந்த கருத்துக்கு மன்னிப்பு கேட்க கோரி நாங்கள் கடிதம் அனுப்பி இருந்தோம்.

மான நஷ்டஈடு வழக்கு




ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு இருந்தோம். இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டு அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது, ஆர்எஸ்பாரதிக்கு எதிராக சாட்சியங்களை கொடுத்து இருக்கிறோம்.


கடந்த முறை சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு வந்த போது, டிஆர்பாலுவிடம் குறுக்கு விசாரணை நடத்திய போது, என் மீது சில குற்றச்சாட்டுகளை வைத்து இருந்தார். அதனால் டிஆர்பாலு மீது மேலும் ஒரு மான நஷ்ட ஈடு வழக்கு தொடுத்து இன்று புகார் அளித்து இருக்கிறோம். ஆர்எஸ்பாரதி மீது தொடுக்கப்பட்ட வழக்கு நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டது. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

@block_P@

டீயும், காபியும் கலக்காது!

விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தையா? என்ற கேள்விக்கு அண்ணாமலை, '' விஜயுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படவில்லை என தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துவிட்டார்.

ஒரு டீயும், காபியும் கலக்காது. காரணம் சித்தாந்தங்கள் வேறு. அதிமுக தலைமையிலான தேஜ கூட்டணி வலுவாக இருக்கிறது. தேர்தலை சந்திப்பதற்கு தயாராக இருக்கிறோம். வெற்றியை பெறுவோம் என்று நம்பிக்கை இருக்கிறது. நாளை திருச்சியில் நடக்கும் பொதுக்கூட்டம் தேஜ கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் என நம்புகிறோம்'' என பதில் அளித்தார். block_P
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

சென்னை சைதாப்பேட்டையில் நிருபர்கள் சந்திப்பில் பல்வேறு கேள்விகளுக்கு அண்ணாமலை பதில் அளித்தார். அவரது பேட்டி தினமலர் யுடியூப் உள்ளிட்ட இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Advertisement