திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகள் கேட்கும் மார்க்சிஸ்ட்!

9


சென்னை:''கூடுதல் தொகுதிகள் வழங்க வேண்டும் என கேட்டுள்ளோம். நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கும்'' என மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.


சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை திமுக தீவிரப்படுத்தியுள்ளது. தொகுதி பங்கீட்டுக்கு எல்லா கட்சிகளும் சம்மதித்த நிலையில், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கட்சிகளிடம் மட்டும் இன்னும் முடிவு எட்டவில்லை. தொகுதி பங்கீடு தொடர்பாக, திமுக-மார்க்சிஸ்ட் இடையே 2ம் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.


பிறகு நிருபர்களிடம் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கூறியதாவது: தொகுதிகளின் எண்ணிக்கையை அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். அதில் எங்களுக்கு ஏற்பு இல்லை. கூடுதல் தொகுதிகள் வழங்க வேண்டும் என கேட்டுள்ளோம்.


தலைமையிடம் பேசிவிட்டு மீண்டும் பேசலாம் என பேச்சுவார்த்தை குழு தெரிவித்துள்ளது. ஆகவே நாளை மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கும். கடந்த காலத்தில் இல்லாத வகையில் நிறைய புதிய கட்சிகள் கூட்டணிக்கு வந்துள்ளன என்ற நியாயமான காரணத்தை திமுக தொகுதிப் பங்கீடு குழு சொன்னது.


அது ஏற்கத்தக்கது என்றாலும், நாங்கள் எதிர்பார்த்த கூடுதலான தொகுதிகளுக்கு வாய்ப்பில்லை என்ற நிலையில் கடந்த முறை போட்டியிட்டதை விட கூடுதலான தொகுதிகளில் போட்டியில் போட்டியிட வேண்டும் என வற்புறுத்தி இருக்கிறோம்.


தலைவரிடம் பேசிவிட்டு நாளை சந்திக்கலாம் என்று கூறியிருக்கின்றனர். நாளை தொடர்ந்து பேசுவோம். இவ்வாறு சண்முகம் கூறினார். கடந்த 2021ம் சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் 6 தொகுதிகளில் போட்டியிட்டது.

Advertisement