தகுதியுள்ள எந்த வாக்காளரின் பெயரும் நீக்கப்படாது; தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் உறுதி

3

கோல்கட்டா: ''வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதியுள்ள எந்த வாக்காளரின் பெயரும் நீக்கப்படாது. தகுதி உள்ள வாக்காளர்கள் நிச்சயம் ஓட்டளிக்க அனுமதிக்கப்படுவர்'' என தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் உறுதி அளித்துள்ளார்.

மேற்கு வங்கத்திற்கு சென்ற தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் அரசியல் கட்சிகள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு, நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது: மேற்கு வங்கத்தில் நேர்மையான, அமைதியான முறையில் தேர்தல் நடத்துவதே எங்கள் நோக்கம். தகுதி உள்ள வாக்காளர்கள் யாரும் நீக்கப்பட மாட்டார்கள். தகுதி உள்ள வாக்காளர்கள் நிச்சயம் ஓட்டளிக்க அனுமதிக்கப்படுவர்.

எந்த மெத்தனமும்...!



மேற்குவங்க மக்கள் எப்பொழுதும் அமைதி மற்றும் ஜனநாயகம் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். மேற்குவங்க தேர்தல் நடைமுறையில், அனைத்து அரசு ஊழியர்களும் தேர்தல் கமிஷனின் அறிவுறுத்தல்களின்படி பணியாற்ற வேண்டும். எந்த மெத்தனமும் பொறுத்துக்கொள்ளப்படாது. சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்ய வேண்டும். மேற்கு வங்கத்தில் 80,000 வாக்குச் சாவடிகள் உள்ளன.

நியாயமானது




61 ஆயிரம் வாக்குச்சாவடிகள் கிராமப்புறங்களில் அமைந்துள்ளன. வாக்களிப்புச் செயல்பாட்டின் போது வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்காக, மாநிலம் முழுவதும் உள்ள வாக்குச் சாவடிகளில் தேர்தல் கமிஷன் 100 சதவீத இணையதள ஒளிபரப்பை செயல்படுத்தும்.


வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) அரசியலமைப்புச் சட்டத்தின்படி நடைபெறுகிறது. அது முற்றிலும் நியாயமானது. இவ்வாறு ஞானேஷ் குமார் கூறினார்.

Advertisement