வருத்தம் தெரிவித்திருக்க மாட்டேன்; திரிஷாவால் விஜய்க்கு பாதிப்பு: பார்த்திபன் புதிய வீடியோ வெளியீடு
சென்னை: இப்படி ஒரு கருத்தை திரிஷா பதிவிடுவார் என தெரிந்திருந்தால் வருத்தம் தெரிவித்து இருக்க மாட்டேன். கரூர் பிரச்னையில் விஜய்க்கு ஏற்படாத பாதிப்பு திரிஷா உடன் சென்ற நிகழ்வால் ஏற்பட்டுள்ளது என இயக்குநர் பார்த்திபன் வெளியிட்ட புதிய வீடியோவில் தெரிவித்து இருக்கிறார்.
விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவர் வீட்டில் அனுமதிக்க விஜய் மறுப்பதாகவும் கூறி பரபரப்பை கிளப்பி உள்ளார். மறுபக்கம் ஒரே கலரில் உடை அணிந்து, விஜய், திரிஷா ஜோடியாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றது கடும் விமர்சனத்தை கிளப்பியது.
இந்த சூழலில் ஒரு விழாவில் திரிஷா பற்றி பேசுகையில், 'குந்தவை வீட்டிலேயே குந்த வைத்தால் நல்லது' என இயக்குநர் பார்த்திபன் தெரிவித்தார். இதற்கு திரிஷா கடும் கண்டனம் தெரிவித்தார். பிறகு தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து பார்த்திபன் எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
புதிய வீடியோ
அவர் வருத்தமே தெரிவித்திருக்க கூடாது என பலரும் இணையத்தில் பதிவிட்டனர்.
இந்நிலையில் திரிஷா குறித்து பேசி மீண்டும், 'குந்தவை-மனதில் குந்த வை' என்ற பெயரில் புதிய வீடியோ ஒன்றை பார்த்திபன் வெளியிட்டுள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: தவறு என்பது தவறி செய்வது, தப்பு என்பது தெரிந்து செய்வது. தவறு செய்தவன் திருந்த பார்க்க வேண்டும். தப்பு செய்தவன் வருந்தி ஆக வேண்டும். அதே மாதிரி தான், நான் வருத்தம் தெரிவிக்கிறேன் ஒரு விதம். மன்னிப்பு கேட்கிறேன் என்பது இன்னொரு விஷயம். ஒரு நிகழ்ச்சியில் தவறு நடந்ததாக உணர்கிறேன். உண்மையில் அது தவறி தான் நடந்தது.
100% பொய்
நான் விஜய், அஜித் பற்றி பேசுகையில் ஒரு போட்டோ வந்தது. அதை பார்த்ததும் என்ன பேசுவதென தெரியமால் திகைத்துவிட்டேன்.
@quote@நான் திட்டமிட்டு அவர் போட்டோவை போட்டு பேச வேண்டுமென ஆசைப்பட்டேன் என சொல்வது 100 சதவீதம் பொய். அப்படி நான் யாரிடமும் அடிமையில்லை. நான் காசு வாங்கிக்கொண்டு, எந்த நிகழ்ச்சிக்கும் நான் செல்லவில்லை. quote
இதனை என் மரணம் வரைக்கும் நான் செய்ய போவதில்லை. காசு வாங்கி கொண்டு எந்த கட்சியிலும் சேர போவதும் இல்லை. காசுக்காக நான் எந்த தவறையும் செய்ய போவதில்லை.
அடி மனதில்…!
திரிஷா வீட்டிலேயே இருந்திருக்க வேண்டும் என பலரும் சொன்னார்கள். அரசியல் என்பது சாதாரண விஷயம் இல்லை. விஜய் பல தடைகளை கடந்து வந்து கொண்டு இருக்கிறார். கரூர் பிரச்னையில் கூட விஜய்க்கு விமர்சனங்கள் வந்தன. இந்த அளவுக்கு பாதிப்பு வரவில்லை. இவ்வளவு பாதிப்புக்கும் காரணமான பெண்மணி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் இருந்திருக்கலாம் என்பது எனது அடி மனதில் இருந்தது. ஆனால் அதை சொல்வதற்காக அந்த மேடைக்கு நான் செல்லவில்லை. இவங்க போட்டோவை போட்டு பேச வேண்டும் என்பது எனது லட்சியம் இல்லை.
ஆதங்கம்
குந்தவையை வீட்டிலேயே குந்த வைத்து இருந்திருக்கலாம் என நான் சொன்னது ஆதங்கம். சமுத்திரகனியும் மிகுந்த அன்பின் வெளிப்பாடாகத்தான் பேசினார்.
@quote@ நான் பிரச்னைகளை எப்போதும் விரும்பாதவன். அந்த வீடியோவை டெலிட் செய்ய சொன்னேன். ஆனால் வேறு வழியில் ரிலீஸ் ஆகிவிட்டது. quote
நான் ஒரு மூன்றாவது மனுஷியை பற்றித்தான் பேசினேன். இந்த பிரச்னையில் 3 பேரை எடுத்துக்கொண்டால், முதலில் எனது அன்பு நண்பர் விஜய். அவரின் வளர்ச்சியை பார்த்து நான் சந்தோஷப்படுகிறேன். இரண்டாவது இடத்தில் அவருடைய மனைவி இருப்பார்கள்.
கஷ்டம்
கோர்ட் தீர்மானிக்கும் வரை அவர்கள் மனைவி தான். முக்கியமான ஸ்தானத்தில் இருக்கிறார். இந்த மூன்றாவது மனுஷி வீட்டில் இருந்து இருக்கலாம் என்று சொன்னேன். ஆனால் இதை பெண்களுக்கு எதிராக பேசியதாக கூறுகிறார்கள். அது எனக்கு ஒரு மாதிரி கஷ்டம் ஆகிவிட்டது. நான் வருத்தம் தெரிவித்தது ரொம்ப சின்சியராகத்தான் தெரிவித்திருந்தேன்.
இப்படி ஒரு ட்வீட் (திரிஷாவின் ட்வீட்) வரப்போகிறது என தெரிந்திருந்தால் நான் வருத்தம் தெரிவித்திருக்கவே மாட்டேன். அதை பார்த்த உடன் இன்றைக்கு ஒரு வீடியோவை இப்படி பண்ண வேண்டும் என்ற உத்வேகத்தை எனக்கு ஏற்படுத்தி இருக்கிறது.
கண்டனம் ஏன்?
மூன்றாவது மனுஷியின் மூன்றாம் தரமான ட்வீட்டால்தான் இதை பேசுகிறேன். அவரை பற்றி பொதுவெளியில் எக்கச்சக்கமான விமர்சனங்கள் இருக்கின்றன. அதற்கெல்லாம் அவர் பதில் சொல்லவில்லை.
@quote@எனக்கு மட்டும் கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார். நீங்கள் ஏன் வருத்தம் தெரிவித்தீர்கள் என என்னிடம் கண்டனம் தெரிவித்தவர்களும் இருக்கிறார்கள். இந்த விஷயத்தில் என்னுடன் நிற்பவர்களுக்கு நன்றி. quote
நீங்கள் நன்மைக்கு பக்கத்தில் நிற்கவில்லை. உண்மைக்கு பக்கத்தில் நிற்கிறீர்கள். இதனால் உங்களை நான் பாராட்டுகிறேன். மேலும் அடுத்த வீடியோ வந்தாலும் வரலாம். இவ்வாறு பார்த்திபன் கூறி இருக்கிறார்.
திராவிட பரம்பரையில் இதெல்லாம் சாதாரணமப்பா
சற்றும் முதிர்ச்சியற்ற பார்த்திபனின் பேச்சு, இவர் மகளுக்கு இது போன்ற நிலை வராது என சொல்வாரா. அல்லது அறிவற்ற விஜய் இடம் பொய் ஏன் நீ த்ரிஷாவுடன் நின்றாய் என சொல்ல தைரியம் உண்டா? பார்த்திபன் ஒரு வெற்று சிந்தனையாளர்... அறிவிலி...இந்திய பெண்கள் அவரை மதிக்க மாட்டார்கள்.
பார்த்திபன் அவர்களின் இந்த வெளிப்பாடு முற்றிலும் சரியே
ஏன் வாய்ப்பு இல்லயா சும்மா இருங்க இந்த கவுண்டமணி பாருங்க ஏதாவது பேசுறாரா
நாம எப்படி நம்ம ஆளை குந்தவைக்க முடியலையேனு யாராச்சும் உனை கேள்வி கேட்டாங்களா?
குந்த வைத்து ... குந்த வைத்து சீதாவை அப்பவே அப்படி செய்திருந்தால் இப்ப இந்த பேச்சுக்கு அதிரடி தேவையில்லை.
பொதுவெளியில் விஜய் குடும்ப விவகாரம் வெளியில் வந்த பின். அக்கரையிலும், ஆதங்கத்திலும் பேசத்தான் செய்வார்கள். விஜய் உத்தமரும் இல்லை. திரிஷா பத்தினியும் இல்லை. இருவருக்கும் நன்கு தெரியும். பொதுவாழ்க்கைக்கு வருபவருக்கு, இப்படி பட்ட அசிங்கம் கூடாது. என்ன சமூகத்திற்கு சொல்ல வருகிறார். பிரச்சனையை தீர்க்க வழிபன்ன தெரியாதவள், எண்ணத்தை கிலிக்காப்போறார். பார்த்திபன் விஜய்க்கு சப்பைக்கட்டு கட்டாதீங்க. நீங்கலும் ஒரு சினிமாகாரர் தானே.
நீங்க பெட்ரோமாக்ஸ் பார்ட்டியா ? சென்சார் பார்ட்டியா ?
மற்றவர் வீட்டு குந்தவையை வீட்டிலேயே குந்த வைத்தால் நல்லது என ஜாலியாக எதுகை, மோனையுடன் கமெண்ட் செய்கிறீர்களே! உங்கள் வீட்டு சீதையை உங்களுடன் குந்த வைக்காமல் தனியாக வனவாசம் அனுப்பியது ஏனோ?
கொழுப்பு அதிகம்.
இது விஜயின் தனிப்பட்ட விஷயம் என்கிறார்கள். அது தவறு கணவன் மனைவி என்று வரும்போது அவர்களின் இருவீட்டார் பேசலாம் மற்றவர்கள் அமைதியாக இருக்கவேண்டும். இருவரின் பிரச்சனையே வேறொரு பெண் எனும்போது அது சமுதாயம் சார்ந்த பிரச்சனையாக பேசுபொருளாக மாறும். ஒரு நடிகனாக இருந்துவிட்டு போங்கள் கவலையில்லை. இந்த நாட்டுக்கு தலைமை தாங்க நான் யோக்கியமானவன் என வரும்போது இதையெல்லாம் பேசவேண்டிய தேவை ஏற்படுகிறது. உங்க கட்சிக்காரர்கள்களுக்கு இது பெருமையாக இருக்கலாம் தமிழக பண்பாட்டுக்கு இது உகந்தது இல்லை. மற்றவர்கள் இல்லம் யோக்கியமா? என நீங்கள் கேட்கலாம் சரிதான் நாங்கள் இந்த தலைமுறை இப்படிப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் ஆதரிக்கமுடியாதுமேலும்
-
விமானப்படை தாக்குதலில் புதிய ஆட்சியாளரான கமேனியின் மகன் கொல்லப்பட்டு இருக்கலாம்; அமெரிக்கா தகவல்
-
தகுதியுள்ள எந்த வாக்காளரின் பெயரும் நீக்கப்படாது; தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் உறுதி
-
காஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாட்டால் ஹோட்டல்கள் மூடல்: அம்மா உணவகங்களை திறக்க இபிஎஸ் கோரிக்கை
-
காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை; அண்ணாமலை பேட்டி
-
திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகள் கேட்கும் மார்க்சிஸ்ட்!
-
மண்ணைக் காக்க பெண்கள் அதிகளவில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட வேண்டும்!