3ம் நாளாக தொடரும் மறியல்: மதுரை ராமேஸ்வரம் 4 வழிச்சாலையில் போக்குவரத்து கடும் பாதிப்பு
மானாமதுரை: விசாரணை கைதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, மானாமதுரையில், ராமேஸ்வரம் செல்லும் பிரதான சாலையில் மூன்றாம் நாளாக மறியல் நடப்பதால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மானாமதுரை போலீஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர் ஆகாஷ் டெலிசன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆகாஷின் மரணத்திற்கு நீதி கோரி மதுரை - ராமேஸ்வரம் நான்கு வழிச்சாலையில் 3வது நாளாக இன்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, ஆகாஷின் குடும்பத்தினர் அவரது உடலை வாங்க மறுத்துள்ளனர்.
இதனால், பட்டியலின மக்கள் தொடர்ந்து நான்கு வழிச்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை ஐகோர்ட் கிளை நீதிபதிகளும் சாலை மறியல் போராட்டத்தை விரைந்து முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென அறிவுறுத்தியுள்ளனர். மதுரை ராமேஸ்வரம் நான்கு வழி சாலையில் போராட்டம் நடந்து வருவதினால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ராமேஸ்வரத்திற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்று வருவதால், மாணவர்களும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். அனைத்து தரப்பினரும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வருவதால் சிவகங்கை மாவட்ட நிர்வாகம் உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி உடனடி தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மேலும்
-
விமானப்படை தாக்குதலில் புதிய ஆட்சியாளரான கமேனியின் மகன் கொல்லப்பட்டு இருக்கலாம்; அமெரிக்கா தகவல்
-
தகுதியுள்ள எந்த வாக்காளரின் பெயரும் நீக்கப்படாது; தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் உறுதி
-
காஸ் சிலிண்டர்கள் தட்டுப்பாட்டால் ஹோட்டல்கள் மூடல்: அம்மா உணவகங்களை திறக்க இபிஎஸ் கோரிக்கை
-
காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை; அண்ணாமலை பேட்டி
-
திமுக கூட்டணியில் கூடுதல் தொகுதிகள் கேட்கும் மார்க்சிஸ்ட்!
-
மண்ணைக் காக்க பெண்கள் அதிகளவில் இயற்கை விவசாயத்தில் ஈடுபட வேண்டும்!