விமானப்படை தாக்குதலில் ஈரானின் புதிய ஆட்சியாளர் படுகாயம்!
டெஹ்ரான்: ஈரானின் புதிய ஆட்சியாளராக நியமிக்கப்பட்ட மறைந்த அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா கமேனியும் விமானப்படை தாக்குதலில் படுகாயம் அடைந்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக பலகட்ட எச்சரிக்கைகளுக்குப் பின், மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து, கடந்த 28ம் தேதி தாக்குதலை துவங்கின. ஒப்புதல் முதல் நாளிலேயே ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி, 86, கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து, இரு தரப்பிலிருந்து தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. 10வது நாளாக போர் நேற்றும் தொடர்ந்தது. ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடையுமாறு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்து வருகிறார். ஆனால், ஈரான் அதை கண்டுகொள்ளவில்லை. மேலும், ஈரானின் அடுத்தத் தலைவரை தேர்ந்தெடுப்பதிலும் தன் பங்கு இருக்க வேண்டும் என்றும், எங்களிடம் ஒப்புதல் பெறாவிட்டால், அவர் நீண்ட காலம் நீடிக்க மாட்டார் என்றும் டிரம்ப் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், போரில் கொல்லப்பட்ட முன்னாள் ஆட்சியாளர் கமேனியின் இரண்டாவது மகன் மொஜ்தபா கமேனி, அடுத்த ஆட்சியாளராக தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே இஸ்ரேலும், ஈரானுக்கு புதிதாக யார் தலைவராக நியமிக்கப்பட்டாலும் அவர்களையும் கொல்வோம் என்று எச்சரித்து இருந்தது.
இந்நிலையில், புதிய ஆட்சியாளராக நியமிக்கப்பட்ட மொஜ்தபா கமேனி, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகள் விமானம் மூலம் நடத்திய தாக்குதலில் படுகாயம் அடைந்து உள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.
குடும்ப ஆட்சி ஒழிக்கப்பட வேண்டும். நம்ம நாட்டுக்கும் ஒது பொருந்தும். தமிழ்நாடு, உ.பி., மஹாராஷ்டிரா மாநிலங்கள் மற்றும் தேசிய அளவில் இந்திரா காங்கிரசு இதில் அடங்கும்.
பதவிக்கு வந்த 47 ஆண்டுகளில் 10 லக்ஷத்திற்கும் அதிகமான பெண்களை, இளம் குழந்தைகளை, அப்பாவிகளை ஷரியத் சட்டப்படி மிக கொடுமையான முறையில் கொலை செய்த குடும்பம் இறைவனின் சாபத்தை அனுபவிக்க தான் வேண்டும்.
தீவிரவாதம் ஒழிக்க பட வேண்டும்
இந்த குடும்ப ஆட்சி முற்றிலும் ஒழிக்க பட வேண்டும்
இந்த குடும்ப அரசியலால் சாமானிய ஈரானிய மக்களுக்கும் அந்த நாட்டிற்கும்
பெரும் நஷ்டம்
மு க, மு க ஸ், க மொ, உ. நி, இ. நி போலவா?
வினை விதைத்தவன்... அதனை அறுவடை செய்தே ஆகவேண்டும்....
ஈரான் சில மாதங்களுக்கு முன்பு அங்கு போராட்டம் செய்த மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்தது.
அதனோட விளைவுதான் அந்நாட்டிற்கு கடவுள் தரும் தண்டனைதான்... இப்போது நடக்கும் போர்...
ஆனால் அதற்காக இஸ்ரேலும் அமேரிக்காவும் செய்வது நூற்றுக்கு நூறு தப்பு... மனித குலத்தின் அழிவிற்கு நெதன்யாகும், ட்ரம்பும் வழிவகுக்கின்றனர்.... இவர்கள் இருவரையும் அழித்தால்தான் உலக மக்களுக்கு நிம்மதி கிடைக்கும்.
இவனுங்களை சீக்கிரமா போட்டுத் தள்ளிட்டு மக்கள் தேர்ந்தெடுக்கும் தலைவரை, குறிப்பாக பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்கும் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
பெண்களுக்கு சுதந்திரம், எண்ணெய் வளம் அமெரிக்காவுக்கு, அடுத்து ஆசியாவில் ஆப்பு.
பெண்களுக்கு சுதந்திரம் என்றாலே மர்ம நபர்கள் வரிசையில் வந்து கருத்து போடுவான் பாருங்கள். இந்த மாதிரி நபர்கள் தான் சபரிமலை கோவிலில் பெண்கள் உள்ளே விடும் கேஸை கோர்ட்டில் வழக்கு போட்டவன்.
Nowadays leaders are all interested only in safeguarding their image, ego and hiding their mistakes in administration. Only very few leaders are thinking about good governance and wellbeing of human life. Only God can save us.மேலும்
-
சம்பளம் வாங்காத எம்.பி.,க்கள் இருவர்; ஒருவர் பாஜ; இன்னொருவர் காங்கிரஸ்!
-
தமிழக மக்களுடன் பழகிய 54 மாதம் ஒரு பொற்காலம்; கவர்னர் ரவி உருக்கம்
-
போட்டியிட விரும்பும் தொகுதிகள்; தி.மு.க.,வுடன் காங்., பேச்சு எப்போது?
-
மதுரை சர்வதேச விமான நிலையம்; திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது மத்திய அமைச்சரவை
-
காஸ் உற்பத்தி 10 சதவீதம் அதிகரிப்பு; உணவகங்களுடன் பேச 3 பேர் குழு - மத்திய அரசு
-
லோக்சபா மரபை மீறி ராகுல் உயர்வானவரா: பார்லியில் மத்திய அமைச்சர் கேள்வி