மதுரை சர்வதேச விமான நிலையம்; திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது மத்திய அமைச்சரவை
புதுடில்லி: மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்துதல் உள்ளிட்ட ரூ.8.8 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 6 திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
புதுடில்லியில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ரூ.8.8 லட்சம் கோடி மதிப்பில் மொத்தம் 6 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மதுரையில் உள்ள விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்துவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதவிர, ஜல் ஜீவன் திட்டத்தை டிசம்பர் 2026ம் ஆண்டு வரை நீட்டித்தல், மேற்கு வங்கத்தில் சந்திரகாச்சி-கராக்பூர் 4வது ரயில்பாதை, சைந்தியா-பாகூர் 3வது பாதை, மத்தியப்பிரதேம் பத்னாவார்-தன்ட்லா-திமர்வானி 4 வழி சாலை ஆகிய திட்டங்களுக்கும் மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டு உள்ளது.
இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கை;
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க மத்திய அமைச்சரவையானது ஒப்புதல் அளித்து இருக்கிறது. தென்தமிழகம், முழுவதும் சுற்றுலா, வர்த்தகம் மற்றும் பொருளாதார வாய்ப்புகள் இதன் மூலம் அதிகரிக்கும். காலத்தினால் அழியாத கலாசாரம், ஆன்மிக பாரம்பரியத்திற்காக கொண்டாடப்படும் மதுரை, இதன் மூலம் உலகளாவிய இணைப்பை வலுப்படுத்துகிறது.
இவ்வாறு பிரதமர் மோடி கூறி உள்ளார்.
இதேபோன்று மற்ற திட்டங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள ஒப்புதல் பற்றிய விவரங்களை பிரதமர் மோடி தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எல்,. முருகன் ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளனர்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிக்கை;
மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, மதுரை விமான நிலையத்தை ஒரு சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க இன்று ஒப்புதல் அளித்துள்ளது. மதுரை விமான நிலையம் சுற்றுலா மற்றும் ஆன்மீகப் பயணங்களை மேம்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது, இதன் மூலம் இப்பகுதியின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு இது பெரும் பங்களிப்பை வழங்குகிறது.
மதுரை விமான நிலையத்தை சர்வதேச அந்தஸ்துக்கு உயர்த்துவது பிராந்திய அளவிலான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும், வர்த்தகத்தை ஊக்குவிக்கும் மற்றும் இப்பகுதியின் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்தும்.
மத்திய இணை அமைச்சர் எல். முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை;
மதுரை விமான நிலையத்தை பெயரளவில் மட்டுமல்லாமல் நடைமுறையிலும் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்திய பிரதமர் மோடிக்குத் தமிழக மக்கள் சார்பாக என் மனமார்ந்த நன்றிகள். இதனால் தென் தமிழகத்தின் வளர்ச்சி புதிய மைல் கல்லை தொடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
வாசகர் கருத்து (8)
K.n. Dhasarathan - chennai,இந்தியா
10 மார்,2026 - 21:48 Report Abuse
கடந்த 5 வருடங்களாக கிடப்பில் கிடந்த விமான நிலைய விரிவாக்கம் இப்போதுதான் கண்ணுக்கு தெரிகிறது, எல்லாம் தேர்தல் ஜாலமா ? மக்களுக்கு தெரியும் என்ன செய்யணுமோ அதை செய்வார்கள். 0
0
vivek - ,
10 மார்,2026 - 22:17Report Abuse
ஷேர் ஆட்டோவில் போகும் தசரதனுக்கு எவளோ கவலை 0
0
Nathansamwi - Gobichettipalayam,இந்தியா
11 மார்,2026 - 10:22Report Abuse
தேர்தல் பயம் வேறென்ன ... 0
0
Reply
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
10 மார்,2026 - 21:47 Report Abuse
சீக்கிரமே மோடிஜி அவர்கள் மதுரை பன்னாட்டு விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவர் விமான நிலையம் என்று பெயர் சூட்டிவிடுங்கள் இல்லையேல் அதற்கும் கருணாநிதி அல்லது உதய நிதி அல்லது இன்பநிதி என்றுபெயர் சூட்டிவிடுவார்கள் பிறகு நிதி பற்றாக்குறை நேரிடும் 0
0
Reply
vivek - Benaras,இந்தியா
10 மார்,2026 - 21:28 Report Abuse
அப்படியே அந்த மெட்ரோ, நாலைஞ்சி வந்தே பாரத், புது ஐடி பார்க், மெடிக்கல் காலேஜ்.. சொல்ல வேண்டியது தானே. காசா பணமா? 0
0
vivek - ,
10 மார்,2026 - 22:18Report Abuse
ஏல benaras...இந்த எண்ணம் வரிசையில் நின்று மூவாயிரம் வாங்கும் போது தோன்றவில்லையா 0
0
Reply
Easwar Kamal - New York,இந்தியா
10 மார்,2026 - 18:54 Report Abuse
மோடிஜி மதுரை மதுரை சர்வதேச விமான நிலையம் yuarityachu அப்படியே AIMS கொண்டு வந்துடீங்கன்னா மதுரை மக்கள் மனதில் நீங்க இடம் பெற்று விடுவீர்கள். இந்த விடியல் 4 வருஷ பற்றும் இப்போது தன அடிக்கல் naturanuva அது முதலும் இறுதியாவாகும் போய் தொலையட்டும். நீங்கள் தமிழகத்துக்கு சிறப்புற செய்ய வேண்டும். 0
0
vivek - Benaras,இந்தியா
10 மார்,2026 - 21:22Report Abuse
நல்லா வச்சி செஞ்சிக்கிட்டு தானே இருக்காரு. 0
0
Reply
மேலும்
-
காங்., எம்.பி., கார்த்தி அலுவலகத்தில் குண்டு வீச்சு
-
பா.ஜ., நிர்வாகிக்கு வெட்டு
-
மெக்கானிக் மர்மச்சாவு
-
செக் மோசடி வழக்கில் தண்டனை உறுதி போஸ்ட்மேன் சிறையில் அடைப்பு
-
சிலிண்டர் தட்டுப்பாடு பரோட்டோ விலை விர்...
-
24 மணி நேரத்திற்கு தான் ஓட்டல்களில் காஸ் பயன்படுத்த முடியும் பரமக்குடியில் விக்கிரமராஜா பேட்டி
Advertisement
Advertisement