சிவாயம் காட்டுவாரியை துார்வார வேண்டுகோள்

குளித்தலை:குளித்தலை அடுத்த கட்டளை மேட்டு வாய்க்கால், வலைய-பட்டி சட்ரஸில் இருந்து பணிக்கம்பட்டி, மேட்டுமருதுார் வழியாக, கல்லு பாலத்தில் கொடிங்கால் வடிகால் வாய்க்கா-லுடன் இணைகிறது. இந்த சிவாயம் காட்டுவாரி, வலையப்பட்-டியில் இருந்து பணிக்கம்பட்டி ஒல்லிவிட்டான் கோவில் வரை, சில விவசாயிகள் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். வாய்க்காலில் செடி, கொடிகள் முழுவதும் வளர்ந்து தண்ணீர் வெளியேற முடி-யாமல் தேங்கியுள்ளது. அவ்வப்
போது பெயரளவில் மட்டுமே
ஆக்கிரமிப்பு அகற்றப்படுகிறது.
வடிகால் வாய்க்காலில் உள்ள, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி, விவசாயிகள் பாதிக்காத வகையில், மழை காலங்களில் தண்ணீர் உடனே செல்லும் வகையில், துரிதமாக துார்வார நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி விவசாயிகள், குளித்-தலை நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் மற்றும் கலெக்ட-ருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement