ஈரானின் புதிய ஆட்சியாளர் நலம்: ஈரான் அதிபர் மகன் உறுதி
டெஹ்ரான்: ஈரானின் புதிய ஆட்சியாளரும், மத குருவுமான மொஜ்தபா கமேனி நலமுடன் பாதுகாப்பாக இருக்கிறார் என அந்நாட்டு அதிபரின் மகன் யூசுப் பெசேஷ்கியன் கூறியுள்ளார்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் ஈரானின் ஆட்சியாளராக இருந்த கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் கொல்லப்பட்டனர். புதிய ஆட்சியாளராக யார் தேர்வு செய்யப்பட்டாலும் அவரை கொல்வோம் என இஸ்ரேல் தெரிவித்து இருந்தது. ஈரானின் புதிய ஆட்சியாளரை தன்னை கேட்டு முடிவு செய்ய வேண்டும் என டிரம்ப் கூறியிருந்தார்.அதே நேரத்தில் புதிய ஆட்சியாளராக கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டார்.
நேற்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகளின் தாக்குதலில் மொஜ்தபா படுகாயம் அடைந்ததாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இது குறித்து ஈரான் எதுவும் கூறாமல் இருந்தது.
இந்நிலையில் ஈரான் அதிபர் மசூத் பெசேஷ்கியான் மகன் யூசுப் டெலிகிராம் செயலியில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: மொஜ்தபா காயம் அடைந்ததாக எனக்கு தகவல் வந்தது. உடனடியாக அவருடன் தொடர்பில் இருந்த நண்பர்களுடன் பேசினேன். ஈரானின் புதிய ஆட்சியாளர் நலமுடன் ஆரோக்கியமாக உள்ளதாக தெரிவித்தனர். எந்த பிரச்னையும் இல்லை என்றனர். இதற்காக இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என பதிவிட்டு உள்ளார்.
வாசகர் கருத்து (7)
kulanthai kannan - ,
12 மார்,2026 - 06:26 Report Abuse
திருமா, ஜவாஹிருல்லா கும்பல் அடுத்த போராட்டத்திற்கு தயாராக வும். 0
0
Reply
Chinnappan Arulappan - ,இந்தியா
11 மார்,2026 - 21:58 Report Abuse
ஈரான் அதிபரின் மகன் ஈரானின் செய்தித் தொடர்பாளரா? ஏன் இந்த அலப்பல்?? 0
0
Reply
RK - ,
11 மார்,2026 - 18:54 Report Abuse
காவு வாங்குகிறார்!!! 0
0
Reply
djivagane - Paris,இந்தியா
11 மார்,2026 - 18:29 Report Abuse
இதெற்குதான் பயந்து இஸ்ரசெல் முதல் அமெய்ச்சேர் நெத்தன்யாகு ஜெர்மனிவுக்கு போய் ஒளிந்துகொண்டார் 0
0
Reply
தியாகு - கன்னியாகுமரி,இந்தியா
11 மார்,2026 - 17:47 Report Abuse
ஆயிரம் வருஷமா ஒரே புக்கை படித்துக்கொண்டு இன்னமும் காட்டுமிராண்டி வாழ்க்கை வாழ்ந்தால் இப்படித்தான் குண்டு விழுந்து சாவு வரும். 0
0
Chinnappan Arulappan - ,இந்தியா
11 மார்,2026 - 22:15Report Abuse
2000 வருடமாக ஒரே புக்கை படிக்குற சனம், அதற்கும் மேல் வயசான புத்தகங்களை படிக்கிற சனம் எல்லாம் உலகில் இருக்கிறார்கள் இதற்கு படிப்பு காரணம் இல்லை காட்டுமிராண்டிகளாக இருக்கும்போது என்ன தின்றார்களோ அதையே இன்னும் தின்பது தான் காரணம் 0
0
Reply
theruvasagan - ,
11 மார்,2026 - 17:22 Report Abuse
ஈரான் அதிபர் மாளிகை மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதலுக்கு மறுநாள் இதே மாதிரி பெரிய முல்லா பாதுகாப்பாக உயிருடன் இருப்பதாக அடிச்சுவிட்டாங்க. அதற்கு மறுநாளே முதல் தாக்குதலிலேயே அந்த தலைவனை பரலோகம் அனுப்பின உண்மை வெளிவந்தது. இப்பவும் அப்படித்தான் நடந்திருக்கும். நாளை அவனுக புளுகு வெட்டவெளிச்சமாகிவிடும் பாருங்க. சொன்னபடி காவு வாங்காமல் இஸ்ரேல்காரன் ஓயமாட்டான். 0
0
Reply
மேலும்
-
ஈரானுடன் 3 முறை ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை: வெளியுறவு அமைச்சகம்
-
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியாவுக்கு 1.35 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் உடன் வந்த கப்பல்
-
சென்னையில் மேலும் ஒரு அதிர்ச்சி சம்பவம்; கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்
-
எரிபொருள் தட்டுப்பாடு அச்சம் தேவையில்லை; முதல்வர் ஸ்டாலின்
-
அதிமுக சந்தர்ப்ப கூட்டணி; காங்., தாக்கு
-
அச்சம் வேண்டாம்; 21 நாள் கையிருப்பு இருக்கிறது; சொல்கிறது பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்கம்
Advertisement
Advertisement