எரிபொருள் தட்டுப்பாடு அச்சம் தேவையில்லை; முதல்வர் ஸ்டாலின்
சென்னை: போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ பதற்றம் கொள்ளவோ தேவையில்லை என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: மேற்காசியப் போர்ச்சூழல் காரணமாக, தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை எதிர்கொள்ள, இரண்டு நாட்களுக்கு முன்பு உயர்மட்ட ஆலோசனை மேற்கொண்டதோடு, சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு - பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விநியோகம் குறித்து பிரதமர் மோடிக்கும், தொடர்புடைய மத்திய அமைச்சர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளேன். உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில், எரிவாயு தட்டுப்பாட்டை எதிர்கொள்வது குறித்த ஆலோசனைக் கூட்டமும் நேற்று நடைபெற்றுள்ளது.
இவ்விவகாரத்தில் மத்திய அரசு மேலும் தீவிரமாகக் கவனம் செலுத்திட பார்லிமென்ட் வளாகத்திலும் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளோம். போதுமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் யாரும் அச்சப்படவோ பதற்றம் கொள்ளவோ வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். இந்நேரத்தில் மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்குத் துணை நின்று மேற்காசியப் போர்ச்சூழலை எதிர்கொள்வோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு பற்றி யாரும் அச்சம் கொள்ளவில்லை, உன்னோட கேடுகெட்ட ஆட்சியை பற்றி தான் அச்சம் கொள்கிறார்கள்.
ஜப்பான் துணை முதலமைச்சராச்சே .... நேரடியா புதிய ஈரான் தலைவருக்கு போன் பேசியிருப்பார்
எரி பொருள் தட்டுப்பாடு பற்றி கவலைப்படமாட்டோம், உங்கள் ஆட்சியில் பெண்களின் பாலியல் குற்றங்களை பற்றி தான் கவலை. அதை பற்றி பேசுங்கள். இதுநாள் வரை நடந்த குற்றங்களுக்கு என்ன பரிகாரம். குற்றங்கள் அதிகரித்து தான் போய் கொண்டிருக்கிறது.......
இப்போது எதிர் கட்சியாக இருக்குற அதிமுககாரன் ஒரு பயலுக்கும் எதிர்க் கட்சி என்றால் எப்படி அரசியல் பண்ண வேண்டும் என்றே தெரிய மாட்டேங்குது! அதனால நீ பழையபடி வீரியம் கொண்ட எதிர்க்கட்சி திமுகவாக வரவேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் இப்போதைய ஆசை!
தலீவரே கூட்டு பலாத்காரம் நடக்குது தலீவரே அது தான் பயமா இருக்கு ,பெட்ரோல் டீசல், காஸ் எல்லாம் பயமில்லை அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் .... பலாத்காரத்தை எப்படி தலீவரே அட்ஜஸ்ட் பண்ணமுடியும் .... கொஞ்சம் யோசிங்க தலீவரே...
அப்புறம் என்ன அவரவர் வீட்டுக்கு கிளம்புங்க சொம்மா பெட்ரோல் பங்க்ல கியூல நிக்காதீங்க
பெற்றோர்கள் சிறுவர்களுக்கு குள்ளநரிகளின் சகல நீதிக்கதைகளையும் அதன் கீழ்த்தர எண்ணவோட்டம் புரியும்படி சொல்லவேண்டும் . வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று பெற்றோர்கள் இருக்க வேண்டாம். இருந்தால் சிறுவர்களை குள்ளநரிகள் கொன்று புசிக்கும்.
இதோ பார்ர்ரா சுடாலினே சொல்லிட்டாரு ஹீஹீஹீமேலும்
-
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க வேறு நாட்டிடம் ஏன் அனுமதி வாங்க வேண்டும்: ராகுல் கேள்வி
-
மோனலிசாவிற்கு கல்யாணம்.
-
எனது செயல்பாடுகள் அனைத்தும் பாரபட்சமற்றவை; லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா
-
மழைநீர் வடிகால் பணிக்கு சாலையில் பள்ளம் தோண்ட வழிகாட்டுதல்கள்: 2 வாரத்தில் பதில் அளிக்க ஐகோர்ட் கெடு
-
டில்லியில் சர்வதேச உணவுத் திருவிழா!
-
அன்புமணிக்கு எதிராக ராமதாஸின் வழக்கிற்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை