லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 7 பேர் பலி
பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிரான போரில், ஈரானுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பும், ஏமனின் ஹவுதி கிளர்ச்சிப் படைகளும் தாக்குதல் நடத்தி வருகின்றன. இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் ஏவுகணைகளை வீசி தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதற்கு இஸ்ரேல் தக்க பதிலடி கொடுத்து வருகிறது.
அந்த வகையில், பெய்ரூட்டில் உள்ள ராம்லெட் அல் பைடா என்ற பகுதியில் உள்ள ஒரு கார் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக லெபனான் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல் காரணமாக, பெய்ரூட்டின் புகழ்பெற்ற கார்னிச் கடற்கரைச் சாலை பகுதியில் கரும்புகை கிளம்பியது. இதனிடையே, பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் உள்ள 10 ஹிஸ்புல்லா அமைப்பின் இலக்குகளை குறிவைத்து தாக்கியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
மேலும்
-
அன்புமணிக்கு எதிராக ராமதாஸின் வழக்கிற்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை
-
ஈரானுடன் 3 முறை ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை: வெளியுறவு அமைச்சகம்
-
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியாவுக்கு 1.35 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் உடன் வந்த கப்பல்
-
எரிபொருள் தட்டுப்பாடு அச்சம் தேவையில்லை; முதல்வர் ஸ்டாலின்
-
அதிமுக சந்தர்ப்ப கூட்டணி; காங்., தாக்கு
-
அச்சம் வேண்டாம்; 21 நாள் கையிருப்பு இருக்கிறது; சொல்கிறது பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்கம்