தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.1200 சரிவு
சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 12) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1200 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில் மார்ச் 09ம் தேதி ஆபரண தங்கம், கிராம் 14,950 ரூபாய்க்கும், சவரன், 1,19,600 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 290 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று முன்தினம் (மார்ச் 10) , தங்கம் விலை கிராமுக்கு, 100 ரூபாய் உயர்ந்து, 15,050 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 800 ரூபாய் அதிகரித்து, 1,20,400 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு, 10 ரூபாய் உயர்ந்து, 300 ரூபாய்க்கு விற்பனையானது. கிலோவுக்கு, 10,000 ரூபாய் அதிகரித்து, 3 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்றைய நிலவரம்
நேற்று (மார்ச் 11) ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கிராமுக்கு 70 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 15,120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலை மாற்றிமின்றி ஒரு கிராம் 300 ரூபாய்க்கும், ஒரு கிலோ 3 லட்சம் ரூபாய்க்கும் விற்பனை ஆனது.
இன்றைய நிலவரம்
இந்நிலையில் இன்று (மார்ச் 12) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1200 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 760 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 150 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 14,970க்கு விற்பனை ஆகிறது. நேற்று சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்த நிலையில் இன்று 1200 ரூபாய் குறைந்துள்ளது.
வெள்ளியும் சரிவு
வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 290 ரூபாய்க்கும், கிலோவுக்கு 10 ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு கிலோ 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த கால தங்கம் விலை நிலவரங்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.
தங்கம் விலை சவரனுக்கு ரூ 12000 சரிவுதான் மகிழ்ச்சி
செய்தியை விட படம் ரொம்ப பேசுதுங்க என்னங்கமேலும்
-
அன்புமணிக்கு எதிராக ராமதாஸின் வழக்கிற்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை
-
ஈரானுடன் 3 முறை ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை: வெளியுறவு அமைச்சகம்
-
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியாவுக்கு 1.35 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணெய் உடன் வந்த கப்பல்
-
எரிபொருள் தட்டுப்பாடு அச்சம் தேவையில்லை; முதல்வர் ஸ்டாலின்
-
அதிமுக சந்தர்ப்ப கூட்டணி; காங்., தாக்கு
-
அச்சம் வேண்டாம்; 21 நாள் கையிருப்பு இருக்கிறது; சொல்கிறது பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்கம்