ஈராக் கடற்பரப்பில் அமெரிக்க கப்பல் மீது தாக்குதல்; இந்தியர் உயிரிழப்பு

1


பாக்தாத்; ஈராக்கிற்கு அருகே அமெரிக்காவிற்கு சொந்தமான டேங்கர் கப்பலான சபேசியா விஷ்ணுவை ஈரான் தற்கொலைப் படகு தாக்கியதில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார்.


ஈராக்கின் கோர் அல் ஜூபைர் துறைமுகத்திற்கு அருகே அமெரிக்காவிற்கு சொந்தமான கச்சா எண்ணெய் டேங்கர் கப்பலான சபேசியா விஷ்ணுவை ஈரானின் தற்கொலை படகு குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். மீதமுள்ள 27 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இந்திய மாலுமிகளைப் பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளது.

சபேசியா விஷ்ணு என்பது 2007ம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு கச்சா எண்ணெய் டேங்கர் ஆகும். இந்த கப்பல் 228.6 மீட்டர் நீளம், 32.57 மீட்டர் அகலம் உடையது. இதன் மொத்த எடை 42,010 டன் என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, மேற்கு ஆசியாவின் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக குஜராத் துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருந்த தாய்லாந்து நாட்டு கப்பல் தாக்கப்பட்டதற்கு, வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Advertisement