அழுத்தத்துக்கு அடிபணிந்தால் விஜய் அரசியல் எதிர்காலம் சூனியமாகும்; திருமாவளவன்
சென்னை: ''அழுத்தத்துக்கு அடி பணிந்து, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில், த.வெ.க., தலைவர் விஜய் இணைந்தால், அவரது அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும்,'' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி: தி.மு.க., கூட்டணியில், தொகுதி பங்கீடு பேச்சு சுமுகமாக நடக்கிறது. கட்சிகளிடையே பேச்சு நடக்கும்போது, மாறுபட்ட கருத்துகள் வரத்தான் செய்யும். கம்யூனிஸ்டுகள் கூடுதல் தொகுதிகளை கேட்பதால், தி.மு.க., கூட்டணிக்கு எந்த பாதிப்பும் வராது. பொதுத் தொகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுமா என்பது ஓரிரு நாளில் தெரியும்.
அதே நேரத்தில், எதிர்தரப்பில், அ.தி.மு.க., - பா.ஜ., இன்னும் பேச்சு துவக்கவில்லை; கூட்டணி அமைக்கவே, போராடிக் கொண்டிருக்கின்றனர். கடந்த 2021 தேர்தலில், தங்கள் கூட்டணியில் இருந்த கட்சிகளை இழுக்க முயற்சித்து, தே.மு.தி.க.வை இழந்துள்ளனர்.
தற்போது நடிகர் விஜயின், த.வெ.க,வை, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் இணைக்க முயற்சிக்கின்றனர். அழுத்தம் கொடுத்து, விஜயை அடிபணிய வைக்க முயற்சிப்பதாக செய்திகள் வருகின்றன. அதற்கு விஜய் அடிபணிந்தால், அவரது அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும்.
பிற மாநிலங்களில், பா.ஜ., மற்றும் சங்பரிவார் அமைப்புகள், நயவஞ்சகமாக எதிர்க்கட்சிகளை வளைத்து போடுவது அல்லது அவதுாறு பரப்பி எதிர்ப்பது என்ற யுக்தியை கையாளுகின்றனர். அதை தமிழகத்திலும் கையாளுகின்றனர்.
காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்து நடத்தும் போராட்டம், தேர்தலுக்கானது அல்ல. பா.ஜ.,வுக்கு எதிரான போராட்டமும் இல்லை. உலக அமைதியை வலியுறுத்தும் போராட்டம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இவர் என்ன ஜோசியவாதியா உனது கட்சியே நாறிக்கொண்டிருக்கிறது யாருடன் கூட்டணி என்றே தெரியாமல் திக்கு முக்காடி கொண்டிருக்கிறது இதிலே அடுத்த கட்சியைப்பற்றி எதற்காக தூஷனை செய்ய வேண்டும்
எப்பஙுமே அடுத்தவனைப் பற்றியே கவலைப்படுவது. ஆடு நனைகிறதே என்று ஓநாய் கவலைப்படுவதைப்போல.
கூட்டணி வேண்டாம்....10 தொகுதி வென்றாலும் லாபமே
எவனும் மதிப்பதில்லை.
உங்கள் கருதுக்கெல்லாம் நான் கவலைப்பட்டால் என் பிழைப்பு என்ன ஆவது என்றுதான் இவன் மனதில். தோன்றும்
அங்கேயும் துண்டு போட்டு வைக்கிறார்.
திமுக காலில் விழுந்து கிடக்கிறீங்க, திமுக போடுகின்ற 3 சீட்டை வாங்க பாருங்க அடுத்த கட்சியை பற்றி பேச அருகதையில்லை ,
மறுபடியும் இந்த ஆள் பயந்து விட்டாரே
அனுபவஸ்தர் சொன்னா கரெக்டா தான் இருக்கும் ....
நீங்கள் ஏன் பதறுகிறீர்கள்? காலம், காலமாக அறிவாலய கொத்தடிமையாக இருக்கும் நீங்களே இன்னும் சூனியமாகவில்லை. பிளாஸ்டிக் சேர் கொடுத்தும் கூட எதையும் தாங்கும் இதயமாக இருக்கிறீர்கள். கூடுதலாக இப்போது தி.முகவின் அறிவிக்கப்படாத செய்தி தொடர்பாளர் வேறு ஆகிவிட்டீர்கள். தி.மு.கவை வீழ்த்தும் ஒரே நோக்கத்திற்காக இந்த தேர்தலில் விஜய் NDA கூட்டணியில் சேர்ந்தால் அவர் சூனியமாகி விடுவாரா என்ன?மேலும்
-
தே.ஜ., கூட்டணிக்கு போட்டியே இல்லை; நயினார் நாகேந்திரன் கருத்து
-
சட்டசபை தேர்தல் கருத்துக்கணிப்பு: அதிமுக - பாஜ கூட்டணி முன்னிலை
-
இந்த சட்டசபை தேர்தல் மாற்றத்திற்கான தேர்தல்; சொல்கிறார் தே.மு.தி.க., பிரேமலதா
-
கூடுதல் தொகுதி கேட்டு திமுகவுக்கு கெடு விதித்தார் த.வா.க., வேல்முருகன்
-
மதுபான கொள்கை வழக்கு; கெஜ்ரிவால் கோரிக்கையை நிராகரித்தது டில்லி ஐகோர்ட்
-
நடிகர் விஜய்யின் தவெகவுடன் கூட்டணி பேச்சு நடத்தவில்லை; இபிஎஸ்