கூடுதல் தொகுதி கேட்டு திமுகவுக்கு கெடு விதித்தார் த.வா.க., வேல்முருகன்
சென்னை: 'தி.மு.க., கூட்டணியில் தொடர, கூடுதல் தொகுதிகள் வேண்டும்' என, த.வா.க., தலைவர் வேல்முருகன், தி.மு.க., தலைமைக்கு கெடு விதித்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமை கட்சி, தி.மு.க., கூட்டணியில் உள்ளது. அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ.,வாக உள்ளார். வரும் தேர்தலில், இரண்டு தொகுதிகளை தி.மு.க.,விடம் கேட்டுள்ளார். ஆனால், ஒரு தொகுதியை மட்டுமே தருவதாக, தி.மு.க., தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், கட்சியின் அரசியல் தலைமை குழுவின் அவசர கூட்டம், சென்னையில் நடந்தது.
அதன்பின் வேல்முருகன் அளித்த பேட்டி: கடந்த நான்கு தேர்தலாக, தி.மு.க., கூட்டணியில் உள்ளோம். லோக்சபா தேர்தலில், 'சீட்' வேண்டும் என, நாங்கள் கோரிக்கை வைத்தபோது, சட்டசபை தேர்தலில், உரிய இடம் கொடுப்பதாக சொல்லியிருந்தனர். இம்முறை கூடுதல் தொகுதிகளை கேட்டதற்கு, இதுவரை பதில் வரவில்லை.
அதோடு, தமிழக மக்கள் நலனுக்காக, 10 கோரிக்கைகளை முன்வைத்தேன். அதற்கும் பதில் இல்லை. எனவே, எங்களின் கோரிக்கையை ஏற்கவில்லை என்றால், கூட்டணியில் தொடருவதை, மறு பரிசீலனை செய்ய முடிவு செய்துள்ளோம். தி.மு.க., தலைமை சொல்வதை பொறுத்து, விரைவில் முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
IDUU THAVAI ILLATHA AAANEEE ? MR STALIN SIR THROUGH HIM OUT NOTHING IS GOING TO HAPPEN
உங்கள் கோரிக்கை எப்போது மக்கள் கோரிக்கையாக மாறியது பேரம் படியவில்லை என்ற உடன் மக்கள் கோரிக்கை
மக்கள் நல கூட்டணி என்று விஜயை வைத்து திமுகவுக்கு எதிரான ஓட்டுக்களை பிரிக்க திட்டம்
எதற்கு இந்த கட்சி , வேஸ்ட்
.இவர்
தேர்தலில் தனியாக களம் இறங்கி
தனது பலத்தை காண்பிக்கப்படும்
வெற்றி பெற்றால் அமைச்சர் பதவியே கொடுங்கள்.
இதை நீங்கள் உங்கள் கூட்டணியின் விடியாத தலைவர்.... அவரிடம் தனியாக தேர்தலில் நிற்க சொன்னால்... அவர் அதற்க்கு ஒப்புக் கொண்டால்.... பிறகு அடுத்தவர்கள் தனியாக நிற்பதை பற்றி பேசலாம்.....
தனித்து நின்று 100 ஓட்டு வாங்க முடியாத வேல்முருகன் போன்றவர்கள் மிரட்டும் நிலையில் தான் இப்போது திமுக உள்ளது.
விஜயை NDA கூட்டணியில் சேர விடாமல் தடுக்க தனது கூட்டணிக் கட்சியினருடன் சேர்ந்து பேசி வைத்து நாடகம் ஆடுகிறது தி.மு.க ! நாடக மேடையில் நேற்று கம்யூனிஸ்ட்,வி.சி.க இன்று த.வா.க நாளை யாரோ?
ஒன் மேன் ஷோ நடத்துற கட்சிக்கு தலைமை குழு கூட்டமா
பட்சி பறந்து விடும்
காயலான்கடை கட்சிமேலும்
-
சுப்மன் கில், ஸ்மிருதிக்கு விருது: பி.சி.சி.ஐ., கவுரவம்
-
ஆறு ஓவர் அதிசயம் சஞ்சு சாம்சன்: பயிற்சியாளர் காம்பிர் பாராட்டு
-
சீன 'பார்முலா-1': இத்தாலி வீரர் சாம்பியன்
-
தங்கம் வென்றார் பரணிகா: இந்திய ஓபன் 'போல் வால்ட்' போட்டியில்
-
ஜாம்ஷெட்பூரை வென்றது வடகிழக்கு: ஐ.எஸ்.எல்., கால்பந்தில்
-
இந்தியாவுக்கு ஐந்து பதக்கம்: உலக 'யூத்' குத்துச்சண்டையில்