இந்த சட்டசபை தேர்தல் மாற்றத்திற்கான தேர்தல்; சொல்கிறார் தே.மு.தி.க., பிரேமலதா
காஞ்சிபுரம்: ''இந்த சட்டசபை தேர்தல், மாற்றத்திற்கான தேர்தலாக இருக்கும்,” என, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோவில்களில், தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா தரிசனம் செய்தார். உலகளந்த பெருமாள் கோவில், காமாட்சியம்மன் கோவில் ஆகியவற்றில் தரிசனம் செய்த பின், அவர் அளித்த பேட்டி:
தமிழக மக்களுக்கு, நிச்சயமாக நல்லது நடக்கும். தி.மு.க., கூட்டணி, 200 தொகுதிக்கு மேல் கைப்பற்றி, மகத்தான வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கும். இந்த தேர்தல், மாற்றத்திற்கான தேர்தலாக இருக்கும். மக்களுக்கு, துணை நிற்போம். எங்கள் கூட்டணி பலமாக உள்ளது.
தி.மு.க., கூட்டணியில், இன்னும் ஓரிரு நாளில், எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்ற விபரம் அறிவிக்கப்படும். கூட்டணியில், தே.மு.தி.க.,வுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட பின், தே.மு.தி.க., வேட்பாளர்களின் பெயர்களை அறிவிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசியலில் மாற்றம் நிச்சயம் என்று இந்த அம்மாவே ராஜ்ய சபா பதவி கைக்கு கிடைத்தும் சொல்கிறார் இதை முன்பே சொல்லியிருந்தால் அது கிடைக்க வாய்ப்பில்லை நல்ல புத்திசாலி பெண்மணி இனி அவர் தேசிய ஜனநாயக கட்சிக்குத்தான் உழைப்பர்
உண்மையை ஒத்து கொண்டார் மாற்றத்திற்கான தேர்தல், தெரிந்தும் தி மு க வில் போய் சேர்ந்து விட்டார். ஒரு விரல் மாற்றம் தி மு க விற்கு ஏமாற்றம்.
மாற்றம் என்றால் அர்த்தம் தெரியுமா .. கேப்டன் பெயரை வைத்து கோடிகளில் மிதக்கும் அக்கா தம்பி . ஒரு நாள் இரண்டு மகன்களும் உங்களை விட்டு ஓட போகிறார்கள்.
மாற்றம் இல்லை . You will get only zero number Madam.
தமிழ்நாட்டில் இது மாற்றத்திற்கான தேர்தல் என்றால் தமிழகத்தில் ஆண்ட கட்சியே ஆளாமல் வேறு கட்சிதான் ஆட்சிக்கு வரவேண்டும்... .மேலும்
-
டிரம்ப் சொல்வதை எந்த நாடும் கேட்கவில்லை!
-
எம்ஜிஆர், ஜெயலலிதா நன்மதிப்பை பெற்ற ரஜினி மீது அவதூறு; ஆதவ் பெயரை சொல்லாமல் கண்டித்த இபிஎஸ்
-
தமிழகத்தில் ஓட்டுப்பதிவு நாளில் சம்பளத்துடன் விடுமுறை; தேர்தல் கமிஷன் அறிவிப்பு
-
ஈரானின் டான்சிங் ஏவுகணை; முதல்முறையாக இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல்
-
செங்கோட்டை- மயிலாடுதுறை ரயிலில் கிடந்த 12 சவரன் நகை, லேப்டாப்: உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே போலீசார்
-
சீனாவுக்கு நெருக்கடி கொடுக்க பயணத்தை ஒத்தி வைத்தார் டிரம்ப்