தேர்தல் அறிவிப்பு எதிரொலி; தலைமைச் செயலகத்தில் முதல்வர் படங்கள் அகற்றம்
சென்னை: தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததை தொடர்ந்து, தலைமை செயலகத்தில் இருந்த முதல்வர் ஸ்டாலினின் படங்கள் அகற்றப்பட்டன.
தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து விட்டது. தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான அடுத்த நிமிடத்தில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து, பொது இடங்கள் மற்றும் அரசு சுவர்களில் உள்ள அரசியல் கட்சி விளம்பரங்கள், போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் அகற்றும் பணி நடந்து வருகிறது.
அந்த வகையில், தலைமை செயலகத்தில் இருந்த முதல்வர் ஸ்டாலினின் படங்கள் அகற்றப்பட்டன. அதேபோல, அங்கு விளம்பரப்படுத்தப்பட்ட அரசு திட்டங்கள் மற்றும் பிற தலைவர்களின் புகைப்படங்களும் அகற்றப்பட்டன. சென்னையின் முக்கிய பகுதிகளில் உள்ள சுவர்களில் உள்ள படங்களை ஊழியர்கள் பெயின்ட் அடித்து மறைத்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில், அமைச்சர் மெய்யநாதன் எம்எல்ஏ தொகுதி அலுவலகம் சீல் வைக்கப்பட்டது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களை ஊழியர்கள் அகற்றினர். உடுமலை தளி ரோட்டில் உள்ள அரசியல் கட்சி பேனர்களை நகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
ஈரோட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் பெயர் பலகைகளை ஊழியர்கள் அகற்றினர். சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் முதல்வர் படம் மற்றும் பேனர்களை அகற்றி வருகின்றனர்.
கோவை கலெக்டர் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த முதல்வர் ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படங்கள் அகற்றப்பட்டன.

இன்று போகி கொண்டாடி குப்பையில் போடவேண்டியதை போட்டு .. ஆகவேண்டிய காரியத்தை கனகச்சிதமாக செய்து தமிழகம் இனிமேலாவது திருடர்களிடம் இருந்து தப்பிக்க வழிவிடுங்க. திருட்டு காசு வாங்கி வோட்டு போட்டேங்கன்னா உங்க தலையில் நீங்களே நெருப்பு வைப்பதற்கு சமம். அப்படியே பதியவும்.. நல்லோர்கள் இனிமேலாவது நல்லபடியாக வாழ வயிற்றெரிச்சலில் போட்ட பதிவு
இன்று முதல்வர் படம் அகற்றம். நாளை, முதல்வர் தலைமை தாங்கும் திமுக கட்சியே தமிழகத்திலிருந்து அகற்றம். ஸ்வீட் எடு. கொண்டாடு.
ரேஷன் கடைகளிலும் அகற்றுங்கள், குறிப்பாக கட்டுமர படங்களை.
இன்றுடன் கடைசி
எடுத்தது எடுத்தபடியாக இருக்கவேண்டும். திமுக தோற்கவேண்டும். இனி அவர் மற்றும் அவரின் அல்லக்கைகள் படங்கள் தமிழ்நாட்டின் எந்தமூலைமுடுக்குகளிலும் இல்லாமல் செய்யவேண்டிய பொறுப்பு, பொறுப்புள்ள தமிழ்மக்கள் கடமை.
ok,tata,bye,bye end of your story
படத்தை மட்டும் நீக்கி என்ன புண்ணியம். அரசையும் கலைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல் படுத்த வேண்டும். அப்போது தான் தேர்தலில் தில்லு முல்லு செய்ய முடியாது
இன்று போட்டோ!!!நாளை????????
திரும்ப செயற்கை முடி இல்லாமல் இயற்கை முடி நபர் வந்து தமிழகத்தை மலை செடி கொடி மணல் ஆறுகளை காப்பாற்றவேண்டும்
இனி எந்த காலத்திலும் இந்த படம் தேவையே படாது. இதுநாள் வரை அங்கிருந்ததே தமிழகத்தின் கெட்ட நேரம்ன்னு நினைத்துக்கொள்வோம். போதும்டா சாமி.. இப்படி ஒருத்தர் ஒருக்காலும் இனி தமிழகத்துக்கு வரவே கூடாதுன்னு எல்லா கடவுள்களையும் வேண்டிக்கொள்வோம் . ஓஹோ அந்த படத்தை எடுத்த நாள்முதல் தமிழகத்துக்கு நல்ல நேரம் ஆரம்பமாகிவிட்டது.மேலும்
-
தே.ஜ., கூட்டணிக்கு போட்டியே இல்லை; நயினார் நாகேந்திரன் கருத்து
-
சட்டசபை தேர்தல் கருத்துக்கணிப்பு: அதிமுக - பாஜ கூட்டணி முன்னிலை
-
இந்த சட்டசபை தேர்தல் மாற்றத்திற்கான தேர்தல்; சொல்கிறார் தே.மு.தி.க., பிரேமலதா
-
கூடுதல் தொகுதி கேட்டு திமுகவுக்கு கெடு விதித்தார் த.வா.க., வேல்முருகன்
-
மதுபான கொள்கை வழக்கு; கெஜ்ரிவால் கோரிக்கையை நிராகரித்தது டில்லி ஐகோர்ட்
-
நடிகர் விஜய்யின் தவெகவுடன் கூட்டணி பேச்சு நடத்தவில்லை; இபிஎஸ்