இந்தியாவுக்கு ஐந்து பதக்கம்: உலக 'யூத்' குத்துச்சண்டையில்
பாங்காக்: 'பியூட்சர்ஸ்' கோப்பை குத்துச்சண்டை தொடரில் இந்தியாவின் சந்திரிகா, அம்பேகர் (50 கிலோ) தங்கம் வென்றனர்.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், உலக குத்துச்சண்டை 'பியூட்சர்ஸ்' கோப்பை (19 வயது) தொடர் நடந்தது. பெண்களுக்கான 51 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் சந்திரிகா பூஜாரி, உஸ்பெகிஸ்தானின் நஜோகத் மர்டோனோவா மோதினர்.
இதில் சந்திரிகா 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கத்தை தட்டிச் சென்றார்.
மற்றொரு பைனலில் (48 கிலோ) இந்திய வீராங்கனை குஞ்சன், இங்கிலாந்தின் லில்லி பாசெட் மோதினர். இதில் ஏமாற்றிய குஞ்சன் 0-4 என தோல்வியடைந்து வெள்ளி வென்றார்.
பெண்களுக்கான 54 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் ஜாய்ஸ்ரீ தேவி சிரோம், அமெரிக்காவின் ரூயிஸ் மோதினர். இதில் ஜாய்ஸ்ரீ 1-4 என தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார்.
ஆண்களுக்கான 50 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் அம்பேகர், உஸ்பெகிஸ்தானின் அப்துகனி யார்கின்ஜோனோவ் மோதினர். இதில் அசத்திய அம்பேகர் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கத்தை தட்டிச் சென்றார்.
இத்தொடரில் இந்தியாவுக்கு 2 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என, 5 பதக்கம் கிடைத்தது. இந்திய வீராங்கனை ராதாமணி லாங்ஜம் வெண்கலம் வென்றிருந்தார்.
மேலும்
-
பா.ஜ., - என்.ஆர்.காங்., கூட்டணி முறிவு? புதுச்சேரி தே.ஜ., கூட்டணியில் சிக்கல்
-
ஆப்கன் மருத்துவமனை மீது பாக் ராணுவத்தினர் வான்வழி தாக்குதல்; 400 பேர் உயிரிழப்பு
-
ஒடிஷா அரசு மருத்துவமனை தீ விபத்தில் 10 பேர் பலி!: காப்பாற்ற முயன்ற 11 ஊழியர்கள் காயம்
-
ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை பெறக்கூடாது: அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
-
2 இட்லி ரூ.40, அசைவ சாப்பாடு ரூ.350: கமிஷன் லிஸ்ட் பார்த்து கட்சிகள் பதற்றம்
-
உள்ளூர் வாகனங்களை புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு