சீன 'பார்முலா-1': இத்தாலி வீரர் சாம்பியன்
ஷாங்காய்: சீனாவின் ஷாங்காய் நகரில், நடப்பு ஆண்டின் 'கிராண்ட் பிரிக்ஸ் பார்முலா-1' கார்பந்தயத்தின் 2வது சுற்று நடந்தது. பந்தய துாரத்தை ஒரு மணி நேரம், 33 நிமிடம், 15.607 வினாடியில் கடந்த 'மெர்சிடஸ்' அணியின் இத்தாலி வீரர் கிமி ஆன்டோனெல்லி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அடுத்த இரு இடங்களை 'மெர்சிடஸ்' அணியின் ஜார்ஜ் ரசல் (பிரிட்டன்), 'பெராரி' அணியின் லீவிஸ் ஹாமில்டன் (பிரிட்டன்) தட்டிச் சென்றனர்.
ஜப்பான் கோல் மழை
சிட்னி: ஆஸ்திரேலியாவில், பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து 21வது சீசன் நடக்கிறது. சிட்னியில் நடந்த காலிறுதியில் பிலிப்பைன்ஸ், ஜப்பான் அணிகள் மோதின. இதில் கோல் மழை பொழிந்த ஜப்பான் 7-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. அரையிறுதியில் (மார்ச் 18, சிட்னி) ஜப்பான், தென் கொரியா அணிகள் மோதுகின்றன. மற்றொரு அரையிறுதியில் (மார்ச் 17, பெர்த்) ஆஸ்திரேலியா, சீனா அணிகள் விளையாடுகின்றன.
அல்காரஸ் முதல் தோல்வி
இந்தியன் வெல்ஸ்: அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில் நடக்கும் ஏ.டி.பி., மாஸ்டர்ஸ் டென்னிஸ் அரையிறுதியில், ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், ரஷ்யாவின் டேனில் மெத்வெடேவ் மோதினர். இதில் ஏமாற்றிய அல்காரஸ் 3-6, 6-7 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார். இது, இந்த ஆண்டு அல்காரஸ் சந்தித்த முதல் தோல்வி.
எக்ஸ்டிராஸ்
* அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த பாதி மாரத்தான் ஓட்டத்தில் (21.1 கி.மீ.,) இந்தியாவின் குல்வீர் சிங், இலக்கை 59 நிமிடம், 42 வினாடியில் கடந்து 3வது இடம் பிடித்தார். இவர், டில்லி பாதி மாரத்தான் ஓட்டத்தில் (2020) இந்தியாவின் அவினாஷ் சபிள் (1 மணி நேரம், 00.30 வினாடி) படைத்த தேசிய சாதனையை முறியடித்தார்.
* கொல்கட்டாவில் நடந்த ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் கரன் சிங் 1-6, 6-7 என, ஆஸ்திரேலியாவின் பிலிப் செகுலிக்கிடம் தோல்வியடைந்து 2வது இடம் பிடித்தார்.
* கேரளாவின் கொச்சியில், வரும் மார்ச் 31ல் நடக்கவுள்ள ஆசிய கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச் சுற்று போட்டியில் இந்தியா, ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. ஏற்கனவே பிரதான சுற்றுக்கான வாய்ப்பை இழந்த இந்தியா, ஆறுதல் வெற்றி பெற முயற்சிக்கலாம்.
மேலும்
-
விஷ ஊசி செலுத்தி 100 நாய்கள் கொலை; தெலுங்கானாவில் மீண்டும் கொடூரம்
-
அர்ச்சகர்களுக்கு ஊதிய உயர்வு கடைசி நேரத்தில் அறிவித்தார் மம்தா
-
மேற்காசிய நாடுகளில் சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு ரத்து
-
திருவிதாங்கூர் அரண்மனையில் ரூ.2 கோடி தங்க நகைகள் திருட்டு
-
கார் பேனட்டில் 4 கி.மீ., சென்ற ஏட்டு; குட்கா கடத்திய டிரைவர் அட்டூழியம்
-
விஜயை கூட்டணிக்கு அழைத்த பா.ஜ.,: மவுனம் காப்பதால் கட்சியில் குழப்பம்