ஜாம்ஷெட்பூரை வென்றது வடகிழக்கு: ஐ.எஸ்.எல்., கால்பந்தில்
கவுகாத்தி: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் வடகிழக்கு யுனைடெட் அணி 2-1 என, ஜாம்ஷெட்பூரை வீழ்த்தியது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 12வது சீசன் நடக்கிறது. அசாமின் கவுகாத்தியில் நடந்த லீக் போட்டியில் வடகிழக்கு யுனைடெட், ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின. முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட வடகிழக்கு யுனைடெட் அணிக்கு 53வது நிமிடத்தில் ஆன்டி ரோட்ரிக்ஸ் ஒரு கோல் அடித்தார். இதற்கு, 68வது நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி' வாய்ப்பில் ஜாம்ஷெட்பூரின் எரிக் மெஸ்ஸி ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். அபாரமாக ஆடிய ஆன்டி ரோட்ரிக்ஸ், 69வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து மீண்டும் முன்னிலை பெற்றுத்தந்தார்.
தொடர்ந்து போராடிய இரு அணியினரால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் வடகிழக்கு யுனைடெட் அணி 2-1 என்ற கோல் கணக்கில், முதல் வெற்றியை பதிவு செய்தது. இது, ஜாம்ஷெட்பூர் அணிக்கு முதல் தோல்வியானது. ஐந்து போட்டியில் 4 வெற்றி, ஒரு தோல்வி என, 12 புள்ளிகளுடன் ஜாம்ஷெட்பூர் அணி 2வது இடத்தில் நீடிக்கிறது.
ஐந்து போட்டியில், ஒரு வெற்றி, 3 'டிரா', ஒரு தோல்வி என, 6 புள்ளிகளுடன் வடகிழக்கு யுனைடெட் அணி 7வது இடத்துக்கு முன்னேறியது.
கொல்கட்டாவில் நடந்த மற்றொரு லீக் போட்டியில் இன்டர் காஷி, மும்பை அணிகள் மோதின. இதில் மும்பை அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
மேலும்
-
டிரம்ப் சொல்வதை எந்த நாடும் கேட்கவில்லை!
-
எம்ஜிஆர், ஜெயலலிதா நன்மதிப்பை பெற்ற ரஜினி மீது அவதூறு; ஆதவ் பெயரை சொல்லாமல் கண்டித்த இபிஎஸ்
-
தமிழகத்தில் ஓட்டுப்பதிவு நாளில் சம்பளத்துடன் விடுமுறை; தேர்தல் கமிஷன் அறிவிப்பு
-
ஈரானின் டான்சிங் ஏவுகணை; முதல்முறையாக இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல்
-
செங்கோட்டை- மயிலாடுதுறை ரயிலில் கிடந்த 12 சவரன் நகை, லேப்டாப்: உரியவரிடம் ஒப்படைத்த ரயில்வே போலீசார்
-
சீனாவுக்கு நெருக்கடி கொடுக்க பயணத்தை ஒத்தி வைத்தார் டிரம்ப்