ஒடிசாவில் சோகம்; மருத்துவமனையில் தீ பற்றியதில் நோயாளிகள் 10 பேர் பலி
புவனேஸ்வர்: ஒடிசாவில் மருத்துவமனையில் தீ பற்றியதில் நோயாளிகள் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் மருத்தவமனை ஊழியர்கள் 11 பேர் காயம் அடைந்தனர்.
ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் இன்று அதிகாலை முதல் தளத்தில் தீப்பற்றியது. இதையடுத்து மருத்துவனை ஊழியர்கள் நோயாளிகளை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுவதற்கு முயற்சி செய்து இருக்கின்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்தனர். நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த சம்பவத்தில் நோயாளிகள் 10 பேர் உயிரிழந்தனர். நோயாளிகளை பாதுகாப்பாக மீட்டுச் சென்றபோது மருத்துவமனை ஊழியர்கள் 11 பேர் தீக்காயமடைந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலோர் ஐசியுவில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் என்று போலீசார் தெரிவித்தனர்.
ஐசியுவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள், ஒடிசாவில் உள்ள வேறு ஒரு அரசு மருத்துவனைக்கு மாற்றப்பட்டனர். இந்த சம்பவம் குறித்த செய்தி கிடைத்ததும், முதல்வர் மோகன் மஜி உடனடியாக மருத்துவமனைக்கு விரைந்தார். நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களைச் சந்தித்து பேசினார். பின்னர் நிருபர்களிடம் முதல்வர் மோகன் மஜி கூறியதாவது: 23 நோயாளிகள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். காயமடைந்த நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். தீ விபத்துக்கான சரியான காரணம் தற்போது தெளிவாகத் தெரியவில்லை. விரிவான விசாரணை நடத்தி காரணத்தை கண்டறிய அதிகாரிகள், போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு மோகன் மஜி கூறினார்.
வாசகர் கருத்து (6)
அசோகன் - ,
16 மார்,2026 - 15:35 Report Abuse
நேற்று இரவு கடும் காற்று மின்னல் இடியோடு cuttack ல் லேசாக மழை பெய்த போது எலக்ட்ரிகல் கேபிள் பிளாஷ் மற்றும் தீ பிடித்தது. பவர் லைன் உடனடியாக off செய்தாலும் ICU யூனிட் ல் தீ மல மல வென பரவியது. இறந்த எல்லோருமே ICU வில் இருந்தவர்கள் ஓட முடியாத நிலை. இதை இங்குள்ள மக்களே புரிந்து கொண்டு வருத்தப்படுகிறார்கள். எதுவுமே தெரியாமல கருத்து போடுவது தவறு 0
0
Reply
Thirumal s S - Gulbarga,இந்தியா
16 மார்,2026 - 11:05 Report Abuse
அங்க பிஜேபி கவுர்மென்ட் தப்பு ஒன்னும் நடக்காது 0
0
Barakat Ali - Medan,இந்தியா
16 மார்,2026 - 11:31Report Abuse
அட ...... சார் கலாய்ச்சிட்டாராம் ..... 0
0
Senthoora - Sydney,இந்தியா
16 மார்,2026 - 13:33Report Abuse
தண்டனையும் கிடையாது, வடமாநிலம் தப்பியது, ஒடிசாவில் முதலமைச்சர் ராஜினாமா செய்யணுமா? 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
16 மார்,2026 - 10:41 Report Abuse
அரசு மருத்துவமனை மற்றும் கல்லூரி... திறமையாக நிர்வகிக்கப்பட்டு ஒன்று... எனினும் மாநில பாஜக அரசுக்கு கரும்புள்ளி கரும்புள்ளியே ..... 0
0
Reply
Field Marshal - Redmond,இந்தியா
16 மார்,2026 - 09:46 Report Abuse
25 லட்சம் நிவாரணம் ஆறுதல் தரும் விஷயம் 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement