ஹர்ஷித் ராணாவுக்கு மாற்று யாரு
கொல்கட்டா: ஹர்ஷித் ராணாவுக்குப் பதில் கொல்கட்டா அணியில் சிமர்ஜீத் சிங் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளார்.
இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா 23. சமீபத்தில் முடிந்த 'டி-20' உலக கோப்பை பயிற்சி போட்டியில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக பந்துவீசினார். அப்போது வலது முழங்காலில் காயம் ஏற்பட, உலக கோப்பை தொடரில் இருந்து விலகினார். பின் ஆப்பரேஷன் செய்து கொண்டார்.
பிரிமியர் கிரிக்கெட் தொடரில் கொல்கட்டா அணியில் இடம் பெற்றுள்ளார். இந்திய கிரிக்கெட் போர்டு நடத்திய விழாவில் பங்கேற்க, ஹர்ஷித் ராணா, 'வாக்கிங் ஸ்டிக்' உதவியுடன் நடந்து வந்தார்.
இதனால், ஹர்ஷித் ராணா முழுமையாக மீண்டு வர, கூடுதல் கால அவகாசம் தேவைப்படலாம்.
இதையடுத்து, வரும் பிரிமியர் கிரிக்கெட் தொடரில், கொல்கட்டா அணி நிர்வாகம் மாற்று வீரரை ஒப்பந்தம் செய்ய ஏற்பாடு செய்து வருகிறது. இதற்காக 6 வேகப்பந்து வீச்சாளர்கள் பங்கேற்ற தேர்வு முகாம் நடத்தியது. இதில் டில்லியை சேர்ந்த சிமர்ஜீத் சிங் 28, தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. இவர் சென்னை (2022-24ல் 10 போட்டி) அணியில் 3, ஐதராபாத் (2024ல் 4) அணிக்காக 1 சீசனில் விளையாடியுள்ளார். 14 போட்டியில் 11 விக்கெட் மட்டும் சாய்த்துள்ளார். எனினும் தொடர்ந்து 140 கி.மீ., வேகத்தில் பந்து வீசும் திறன் கொண்டவர். யார்க்கர் வீசுவதில் வல்லவரான இவர், டில்லி பிரிமியர் தொடரின் சிறந்த பவுலராக தேர்வானார்.
மேலும்
-
குழந்தைகளுடன் பெண் தற்கொலை முயற்சி
-
ஹோட்டலில் ஜூஸ் வாங்கியவரிடம் எரிவாயுவுக்கும் கட்டணம் வசூல்
-
தேனியில் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் திறப்பு விழா நடிகர் ரவிமோகன் பங்கேற்பு
-
குடும்ப தகராறில் மனைவியை கழுத்தை அறுத்து கொன்ற கணவர்
-
கணவரை விடுவிக்கும்படி வேண்டிய பெண்ணை ஆசைக்கு இணங்க வற்புறுத்திய இன்ஸ்பெக்டர்
-
போக்குவரத்து விதிகளை மீறிய இளைஞருக்கு விநோத தண்டனை