யுஏஇ மீது ஈரான் தாக்குதல் என சித்தரிக்கப்பட்ட ஏஐ வீடியோ: இந்தியர்கள் 19 பேர் உட்பட 35 பேர் கைது
நமது நிருபர்
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) மீது ஈரான் தாக்குதல் என போலியாக சித்தரிக்கப்பட்ட ஏஐ வீடியோவை பரப்பிய இந்தியர்கள் 19 பேர் உட்பட 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து துவங்கிய போர், 15 நாட்களைக் கடந்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக, சவுதி அரேபியா, யுஏஇ, ஓமன், கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் மீது ஈரான் தாக்குதலை நடத்தி வருகிறது. விமான நிலையங்கள், முக்கிய பகுதிகள் குறிவைத்து தாக்கப்படுவதால், வளைகுடா நாடுகளில் சர்வதேச விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், மேற்காசியாவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) மீது ஈரான் தாக்குதல் என போலியாக சித்தரிக்கப்பட்ட ஏஐ வீடியோ சமூக வலைதளத்தில் பரப்பட்டு உள்ளது. போர் தொடர்பாக சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்பியதாகக் கூறி இந்தியர்கள் 19 பேர் உட்பட மொத்தம் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, யுஏஇ அரசு செய்தி நிறுவனம் எமிரேட்ஸ் நியூஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் - ஈரான், அமெரிக்கா போர் மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், அந்த போரைச் சித்தரிக்கும் வகையில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலியான வீடியோக்கள் சமூக வலைதளத்தில் பகிரப்படுகிறது. இத்தகைய செயல் பொதுமக்களை தவறாக வழிநடத்தக்கூடியவை, சமூக அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடியவை. எனவே போலி வீடியோக்கள் பரப்பிய நபர்கள் கைது செய்யப்பட்டனர் என எமிரேட்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது, இந்தியர்கள் 19 பேர் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 35 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். இந்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபணமானால் ஓராண்டு சிறை தண்டனையும், 25 லட்சம் அபராதமும் விதிக்கப்படலாம். அவர்களுக்கு நிச்சயமாக கடும் தண்டனை வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அயோக்கிய தனம். மரண தண்டனையையெ கொடுக்கலாம். தங்கள் வேலைய செய்யும் நாட்டிற்கென பங்க்கம் விலைய்யபவர்கள் உண்ட வீட்டிற்கு துரோகம். யோகியா தனத்திலும் அயோக்கிய தனம். சில பண பேராசை கொண்டவர்கள் தான் இது போனால் செய்ய கூடும். இவர்கள் இஙகுள்ள நம் நாட்டு சிவப்பா வடக்கத்தியனாகவும் இல்லாமல் வெளி நட்டு கைய்யக்கூலியாகவும் இருக்கும் டூப் விட்டு திரியும் துரோகியின் கை பாவைகளா?
இவனுகளா இந்தியர்கள்? பஞ்சம் பிழைக்கப் போன நாட்டுல ஒழுங்கு மரியாதையா பொழைப்பைப் பார்க்காமல், மதப்பற்றின் காரணமாக ஈரானுக்கு ஆதரவாக பொய் செய்திகளை பரப்பி, இப்ப UAE நாட்டின் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்ட மர்ம நபர்கள்.
யுஏ. ஈ இல் செருப்படி . திருமா பருப்பு அங்கே வேகாது
போனோமா வேலை பார்த்தோமோ வந்தோமோ என்று இருக்கனும் தேவையா இது ?
ஒழியட்டும் சமுதாய சமூக விரோதிகள்.
நீங்கள் இங்கே இந்தியாவில் உருட்டுகிற மாதிரி அங்கே பண்ண முடியாது . பாரத பிரதமர் மிகவும் அமைதியானவர்.
நம் நாட்டின் சட்ட நிபுணர்கள் நமது சட்டங்களிலும் இது போன்ற கடும் தண்டனையை அமலாக்க வேண்டும்.
நம்மூரிலியும் காஸ் மற்றும் பெட்ரோல் செயற்கை தட்டுப்பாடு என சமூக ஊடகங்களில் பரப்பும் கண்ணியமற்ற கிராக்கிகளை கிடுக்கி பிடி வைத்து சரமாரியாக கைது நடவடிக்கை செய்தால் நல்லது. அநேகர் தமிழ்நாட்டில் மாற்றுவார்கள். செய்வார்களா மத்திய அரசு என்பதே கேள்வி. கண்டிப்பா மாநில அரசு செய்யாது என்பது ஊரறிந்த விஷயம். இது உண்மையான மக்களின் வினா
இந்த மாதிரி நிறைய பேர் இங்கேயும் சுற்றித் திரிகிறார்கள்
உண்மை அது தானேமேலும்
-
வேட்புமனுவில் சொத்து விபரம் மறைப்பு; இபிஎஸ் வழக்கு ஏப்.14ல் விசாரணை; சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு
-
மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை; அரசு மருத்துவக் கல்லுாரி டாக்டர் கைது
-
விஜய்க்கு 24 மணி நேரமும் அறிவுரை சொல்லும் திமுக: அண்ணாமலை கிண்டல்
-
மேற்கு வங்கம், கேரளா சட்டசபை தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்தது பாஜ
-
மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை: மருத்துவ கல்லூரி டாக்டர் கைது
-
4 மாவட்ட எஸ்பிக்கள் மாற்றம்: தேர்தல் கமிஷன் உத்தரவு