மருத்துவ மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்; அரசு மருத்துவக் கல்லுாரி டாக்டர் கைது

21

ஊட்டி: ஊட்டியில், வட மாநிலத்தை சேர்ந்த மருத்துவ மாணவியை, பாலியல் ரீதியாக துன்புறுத்திய ,அரசு மருத்துவ கல்லுாரி டாக்டர் கைது செய்யப்பட்டார்.


நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே உள்ள பிங்கர்போஸ்ட் பகுதியில் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை உள்ளது. இங்கு, வட மாநிலத்தை சேர்ந்த, 22 வயது மாணவி மருத்துவம் படிக்கிறார். அவரிடம், தேர்வில் வெற்றி பெற உதவுவதாக கூறி, கல்லுாரியில் பணியாற்றும் டாக்டர் ஓம்பிரகாஷ், 44, தனியார் ஓட்டலுக்கு மாணவியை அழைத்து வந்து, பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளார்.

மாணவி கூச்சல் போட்டு அலறினார். அவரது அலறல் கேட்டதும் ஓட்டல் ஊழியர்கள் உடனடியாக போலீசாருக்கு தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, ஊட்டி நகர போலீசார் சென்று விசாரணை நடத்தினர். அதில், டாக்டர், மாணவியை துன்புறுத்தியது தெரியவந்தது.


ஊட்டி மகளிர் போலீசார், நடத்திய விசாரணையில், 'டாக்டர் சென்னையை சேர்ந்தவர். அவருக்கு இரு திருமணங்கள் நடந்த நிலையில், ஊட்டியில் தனியாக வசிக்கிறார்' என, தெரிய வந்தது.


இன்ஸ்பெக்டர் நித்யா தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து, டாக்டர் ஓம் பிரகாஷை கைது செய்து, மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Advertisement