காபி குடிக்கும் நெதன்யாகு வீடியோ போலி: உண்மையை போட்டுடைத்த க்ரூக்
டெஹ்ரான்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு காபி குடித்துக் கொண்டே பேசுவது போல் வெளியிடப்பட்டு உள்ள வீடியோ போலியானது என்று எக்ஸ் தளத்தின் செயற்கை நுண்ணறிவு மென்பொருள் க்ரூக் கூறி உள்ளது.
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அலுவலகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திவிட்டோம், இதில் அவர் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை, இறந்திருக்கலாம் என்று ஈரான் அறிவித்தது. ஈரானின் இந்த அறிவிப்பை அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை.
நெதன்யாகு உயிருடன் தான் இருக்கிறார், நலமாக உள்ளார் என்று இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தொடர்ந்து மறுத்து வருகிறது.
தமது மறுப்பை மெய்ப்பிக்கும் வகையில் கையில் காபி அருந்தியபடியே பேசும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்றை இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டது.
அவர் உயிருடன் தான் உள்ளார் என்று இஸ்ரேல் அறிவித்து இருக்கும் நிலையில், அந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து உலக நாடுகள் மத்தியில் பல்வேறு கேள்விகளும், சந்தேகங்களும் எழுந்தன.
இந்நிலையில், இந்த வீடியோ உண்மையானது தானா? என்று எக்ஸ் வலை தள பக்கத்தில் க்ரூக்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த க்ரூக், நெதன்யாகு காபி குடித்தபடி பேசும் வீடியோ ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று அறிவித்துள்ளது. இதுகுறித்து க்ரூக் கூறியிருப்பதாவது;
இந்த வீடியோ ஏஐ-யால் உருவாக்கப்பட்டது. காபி கடையில் வெகு சாதாரணமாக ஈரான், லெபனான் பற்றி பேசுவது ஒரு போலியான வீடியோ ஆகும். இந்த வீடியோவில் உண்மையான நிகழ்வு இருப்பது போன்று தெரியவில்லை.
இவ்வாறு க்ரூக் தெரிவித்துள்ளது.
முன்னதாக இதே வீடியோவை, எக்ஸ் வலைதள பக்கத்தில் பார்த்த பலரும் அவரவர்களாகவே புலன் விசாரணையில் இறங்கி அதன் உண்மைத்தன்மையை பற்றி பேசி வந்தனர். சிலர், காபி கோப்பையை பிடித்தபடி நெதன்யாகு நடந்து வரும் போது, அவரின் முகம் வட்டமாக இருந்தது, பின்னர் அதன் வடிவம் மாறுவது நன்றாகவே தெரிகிறது என்று கூறினர்.
வாசகர் கருத்து (3)
Vasan - ,இந்தியா
16 மார்,2026 - 16:39 Report Abuse
பிரதமர் அவர்கள் உடனடியாக இஸ்ரேல் சென்று அவரை கட்டி தழுவி உறுதி செய்யலாம்.
அல்லது முதல்வர் அவருக்கு கடிதம் எழுதி உறுதி செய்யலாம்.
அவரவர் பாணியில் உறுதி செய்து கொள்ளலாம். 0
0
Reply
vivek - Benaras,இந்தியா
16 மார்,2026 - 16:08 Report Abuse
எதுக்கும் அட்வான்ஸ்சா அஞ்சலி செலுத்தி விடுவோம் 0
0
Reply
Anand - chennai,இந்தியா
16 மார்,2026 - 15:57 Report Abuse
இவிங்களுக்கு வேற வேலையே இல்லை போலிருக்கு. 0
0
Reply
மேலும்
-
வேட்புமனுவில் சொத்து விபரம் மறைப்பு; இபிஎஸ் வழக்கு ஏப்.14ல் விசாரணை; சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு
-
மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை; அரசு மருத்துவக் கல்லுாரி டாக்டர் கைது
-
விஜய்க்கு 24 மணி நேரமும் அறிவுரை சொல்லும் திமுக: அண்ணாமலை கிண்டல்
-
மேற்கு வங்கம், கேரளா சட்டசபை தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்தது பாஜ
-
மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை: மருத்துவ கல்லூரி டாக்டர் கைது
-
4 மாவட்ட எஸ்பிக்கள் மாற்றம்: தேர்தல் கமிஷன் உத்தரவு
Advertisement
Advertisement