மூதாட்டியின் 1 சவரன் நகை 'ஆட்டை' போட்டவர் கைது
சென்னை: மூதாட்டியிடம் நுாதனமாக பேசி 1 சவரன் நகையை 'ஆட்டை' போட்டவர் கைது செய்யப்பட்டார்.
சூளை, ஆண்டியப்பன் நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் காளியம்மாள், 76. இவர், 17ம் தேதி காலை சூளை, வி.வி.கோவில் தெருவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாத்திரை வாங்க சென்றார்.
அப்போது வழியில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அவரை வழிமறித்து ரம்ஜான் மாதம் என்பதால் ஒருவர் ஏழைகளுக்கு நகை மற்றும் பணத்தை தருவதாக கூறியுள்ளார்.
மேலும் பூட்டிய கடை அருகே அமர வைத்துவிட்டு, 'காதில் மாட்டலுடன் போட்டு இருக்கும் நகை மற்றும் பணத்தை கொடுங்கள்' சிறிது நேரத்தில் வருகிறேன் எனக்கூறி மர்மநபர் சென்றுள்ளார்.
வெகுநேரமாகியும் மர்ம நபர் வராததால், ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மூதாட்டி வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்தனர்.
இதில், டி.பி.சத்திரம் பகுதியைச் சேர்ந்த திருமலை, 50 என்பவர், மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி பணம் மற்றும் நகையை பறித்துச் சென்றது தெரியவந்தது. நேற்று அவரை கைது செய்த போலீசார், நகையை பறிமுதல் செய்தனர்.
மேலும்
-
பிரீமியம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்வு
-
சவுதியில் மேலும் ஒரு இந்தியர் பலி
-
'ஏர் இந்தியா' நிர்வாக அலட்சியத்தால் 8 மணி நேரம் வீணாக பறந்த பயணியர்
-
மேற்காசிய வான்வெளியை தவிர்க்க விமான நிறுவனங்களுக்கு அறிவுரை
-
பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுகின்றன பார்லிமென்ட் நிலைக்குழு பாராட்டு
-
கேரளாவை மிரட்டும் 'ஷிகெல்லா' பாக்டீரியா வயிற்றுப்போக்கால் 3 வயது குழந்தை பலி