கேரளாவை மிரட்டும் 'ஷிகெல்லா' பாக்டீரியா வயிற்றுப்போக்கால் 3 வயது குழந்தை பலி

கோழிக்கோடு: கேரளாவில், 'ஷிகெல்லா' பாக்டீரியா தொற்றுக்கு ஆளான 3 வயது குழந்தை வாந்தி மற்றும் தொடர் வயிற்றுப்போக்கு காரணமாக உயிரிழந்த நிலையில், தொற்றுப் பரவலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

காய்ச்சல் கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் குட்டிக்காட்டூர் பகுதி அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் 3 வயது குழந்தைக்கு, சில நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது.

வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தியால் அவதிப்பட்ட குழந்தையை, அவரது பெற்றோர் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை நேற்று உயிரிழந்தது.

துவக்கத்தில், தீவிர இரைப்பை குடல் தொற்று காரணமாக குழந்தை உயிரிழந்திருக்கலாம் என, டாக்டர்கள் சந்தேகித்தனர். ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதில், 'ஷிகெல்லா' எனப்படும் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு குழந்தை உயிரிழந்தது உறுதியாகியுள்ளது.

இதைத் தொடர்ந்து, குழந்தையுடன் தொடர்பில் இருந்த பிற குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

இதில், 11 குழந்தைகளுக்கு, 'ஷிகெல்லா' தொற்று இருப்பது தெரியவந்ததை அடுத்து, அதில் தீவிரமாக பாதிக்கப்பட்ட ஐந்து குழந்தைகளுக்கு கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கண்காணிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனக்குழிக்கரை பகுதியில் செயல்பட்டு வந்த ஒரு அங்கன்வாடி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

குட்டிக்காட்டூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி களில் சுகாதாரத் துறை பணியாளர்கள் தீவிர கண்காணிப்பு மற்றும் துப் புரவு பணிகளைத் துவக்கி உள்ளனர்.

நோய்த்தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் வகையில், வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துதல், குடிநீர் தரப் பரிசோதனைகள் மற்றும் சுகாதார ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

@block_B@

'ஷிகெல்லா' தொற்று என்றால் என்ன-?

' ஷிகெல்லா' நோய்த் தொற்று மற்றும் அதற்கான அறிகுறிகள் குறித்து கோழிக்கோடு மாவட்ட மருத்துவ அதிகாரி ராஜாராம் கூறியதாவது: 'ஷிகெல்லா' நோய்த் தொற்று ஏற்பட்டால் வயிற்றுப்போக்கு, காய்ச்சல், கடும் வயிற்று வலி, வாந்தி, உடல் சோர்வு ஆகிய அறிகுறிகள் தென்படும். நோய் தீவிரமடையும் பட்சத்தில், மலத்தில் இருந்து ரத்தம் வெளியேறும். சுகாதார வசதிகள் குறைவாக இருக்கும் நீர்நிலைகள், அசுத்தமான பகுதிகளில், இந்த தொற்று எளிதில் பரவும். குடி ப்பதற்கும், சமைப்பதற்கும் காய்ச்சிய நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். குறிப்பாக, குழந்தைகள் கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அ ளிப்பது சிக்கல்கள் ஏற்படுவதை தடுக்கும் இவ்வாறு அவர் கூறினார்.block_B

Advertisement