தேர்தல் அதிகாரிக்கு தெரிவிக்காமல் வேட்பாளர் சொத்து விற்க முடியாது
கோவை: தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சொத்து வாங்கினாலோ விற்றாலோ, தானமாக கொடுத்தாலோ பெற்றாலோ தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரியப்படுத்த வேண்டும்.
சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தான செட்டில்மென்ட் செய்தாலோ, பவர் எழுதி கொடுத்தாலோ, மனையிடம், வீடு, அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்டவற்றை வாங்கினாலோ அது குறித்த விபரங்களை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே சமயம் ரத்த உறவுகளுக்கோ கோயிலுக்கு தானமாக கொடுத்தாலோ உறவுகளிடமிருந்து தானமாக பெற்றாலோ அதையும் அதிகாரபூர்வமாக தேர்தல் அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும்.
தேர்தல் கால பரிமாற்றங்கள் அனைத்தும் தேர்தல் கமிஷனுக்கு தெரிவிக்க வேண்டும் என்று புதிய விதிமுறையை தேர்தல் கமிஷன் வகுத்துள்ளது. இது சுயேச்சை வேட்பாளர்களுக்கும் பொருந்தும்.
அதனால் ஒவ்வொரு சட்டசபை தொகுதி எல்லையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் எழுத்துபூர்வமாக தேர்தல் முடியும் வரை போட்டியிடும் வேட்பாளர்கள் சொத்து பரிமாற்றங்களில் ஈடுபட்டால் அது குறித்த தகவல்களை தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.