100 கிலோ கஞ்சா பறிமுதல் :குற்றவாளி கேரளா ஓட்டம்
போத்தனூர்:குனியமுத்தூர் அருகே, 100 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கில் முக்கிய குற்றவாளி கேரளாவிற்கு தப்பி விட்டதாக தெரிகிறது.
இடையர்பாளையம், கறிவேப்பிலை தோட்டம் பகுதியில் ஷேக்முகமது என்பவர் கார் உதிரி பாக ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். அங்கு போலீசாரின் அதிரடியில், 100 கிலோ கஞ்சா சிக்கியது.
உக்கடம் அப்பாஸ், போத்தனூர் ரூபன், வெள்ளலூர் பென்னி ஜேக்கப், ஆலுவா நவுபுல், ஒர்க் ஷாப் உரிமையாளர் போத்தனூர் ஷேக்முகமது ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கஞ்சா வாங்கி வரும் உக்கடம் ஜலீல் மட்டும் சிக்கவில்லை. அவர் மீது போத்தனூர், குனியமுத்தூர், உக்கடம், கடை வீதி ஸ்டேஷன்களிலும், பிற மாவட்டம், மாநிலங்களிலும், 20க்கு மேற்பட்ட கஞ்சா கடத்தல் வழக்குகள் உள்ளன.
இவர் கேரளாவுக்கு தப்பி விட்டதாக தெரிகிறது. தனிப்படை போலீசார் கேரளா சென்றுள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement