ரூ.1.84 லட்சம் கோடி வேணும்: கேட்கிறது அமெரிக்க ராணுவம்
நியூயார்க் : ஈரான் உடனான போரைத் தொடர்ந்து நடத்துவதற்கும், ஆயுத உற்பத்தியை அதிகரிப்பதற்கும் 1.84 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதி தேவை என்று அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 28ம் தேதி முதல் மேற்காசிய நாடான ஈரானுக்கு எதிராக அமெரிக்க - இஸ்ரேல் நடத்தி வரும் கூட்டு தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை மீண்டும் உற்பத்தி செய்ய இந்த தொகை தேவைப்படுவதாக ராணுவம் தெரிவித்துள்ளது. இதற்கான நிதியை விடுவிக்க பார்லிமென்ட்டில் ஒப்புதல் பெறும்படி வெள்ளை மாளிகையிடம் கோரிக்கை வைத்துள்ளது.
ஆனால் போருக்கு எதிரான சில எம்.பி.,க்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முதல் வாரத்திலேயே 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிமாக செலவானதாக ராணுவம் தெரிவித்த நிலையில், போர் நீடித்தால் செலவு மேலும் உயரும் என்பதே அவர்களது குற்றச்சாட்டு.
வாசகர் கருத்து (1)
வாய்மையே வெல்லும் - மனாமா,இந்தியா
20 மார்,2026 - 00:37 Report Abuse
வயிறு எரிஞ்சு சொல்லும் மக்கள் ஒன்று தான்.. பாழாப்போன அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் மாதிரி ஒரு நாசகரகன் பிறக்கவே கூடாது. இவனால் உலகத்துக்கே பேராபத்து.. இறைவா.. நீ தான் துஷ்டர்களை ஆவண செய்து அழிக்கவேணும் இப்படிக்கு .. நல்லோர் வாழும் இந்திய குடிமகனின் குமுறல் . 0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement