திருப்பதிக்கு பக்தர்கள் நடைபயணம்

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வடுகப்பட்டி, மாவேரிப்பட்டி, துாரணம்பட்டி, கீழ்மொரப்பூர், தாமரைகோழியம்பட்டி, ஈச்சம்பாடி, கே.வேட்ரப்-பட்டி, எம்.வெளாம்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் நேற்று, திருப்ப-திக்கு பாதயாத்திரையாக புறப்பட்டுச் சென்றனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், '100க்கும் மேற்பட்ட பக்தர்கள் திருப்பதிக்கு பாதயாத்திரை-யாக செல்கிறோம். வரும், 27ல், திருப்பதிக்கு சென்றடைந்து சுவாமியை தரிசிக்க உள்ளோம். கடந்த, 20 ஆண்டுகளாக திருப்பதிக்கு பாதயாத்-திரையாக சென்று வருகிறோம்' என்றனர்.

Advertisement