ஓட்டு சாவடிகளில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு

சூலூர்: சூலூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஒட்டர்பாளையம் பகுதியில் ஓட்டு சாவடிகளில், சூலூர் தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் கிருஷ்ணா ஆதித்யா நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு அடிப்படை வசதிகள் உள்ளதா என கேட்டறிந்தார். கடந்த தேர்தலில் அந்த ஓட்டு சாவடிகளில் பதிவான ஓட்டு விபரங்களை கேட்டறிந்தார்.

இம்முறை ஓட்டுப்பதிவை அதிகரிக்க வேண்டும், அதற்கான விழிப்புணர்வு பிரசாரங்களை உடனடியாக துவக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

சூலூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெகநாதன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார் மற்றும் ஓட்டு சாவடி நிலை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Advertisement