தேர்தலில் போட்டியிடவில்லை: தவாக வேல்முருகன் அறிவிப்பு

5

சென்னை: திமுகவில் இருந்து விலகிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளார்.


தி.மு.க., கூட்டணியில், கடந்த சட்டசபை தேர்தலில், பண்ருட்டி தொகுதியில், வேல்முருகன் வெற்றி பெற்றார். வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட வசதியாக நெய்வேலி, பண்ருட்டி ஆகிய தொகுதிகளை தி.மு.க.,விடம் கேட்டார். அதை தனக்கு கட்டாயம் கொடுக்க வேண்டும் என வேல்முருகன் விருப்பம் தெரிவித்தார்.

அது தனக்கு கிடைக்காது என தெரிந்ததும், அதிருப்தியில் வேல்முருகன் கூட்டணியிலிருந்து வெளியேறினார். எனினும், நெய்வேலி தொகுதியில் தனித்தே களமிறங்க முடிவெடுத்து இருக்கிறார் என அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது. இந்நிலையில் இன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் சட்டசபை தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளார்.

Advertisement