மருத்துவ செலவுக்கு கொண்டு செல்லும் பணம்; தேர்தல் கமிஷன் அனுமதி
சென்னை: ரூ.50 ஆயிரத்திற்கு மேல் மருத்துவ செலவுக்கு எடுத்து சென்றால் வாட்ஸ் அப்பில் ஆதாரம் இருந்தால் போதும், உரிய ஆவணங்களுடன் ரூ.50,000க்கு மேல் கொண்டு செல்லலாம் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
தேர்தலையொட்டி கண்காணிப்பில் ஈடுபட ஒவ்வொரு தொகுதியிலும் பறக்கும்படை, வீடியோ கண்காணிப்புக்குழு, நிலையான கண்காணிப்புக்குழுக்கள், ஒவ்வொன்றிலும் போலீஸ், வருவாய் உட்பட 5 அலுவலர்கள் உள்ளனர். வாகனத்தில் உரிய ஆவணங்கள், ஆதாரங்கள் இன்றி, ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கம் இருந்தால் பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைக்கின்றனர். இவ்வகையில் தினமும் ரூ. பல லட்சம் பணம், நகைகள் பிடிபடுகின்றன.
சென்னையில் இன்று (மார்ச் 25) நடந்த நிகழ்ச்சியில் 'தமிழக தேர்தல் கையேடு 2026'-யை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டார். அவர் கூறியதாவது: மருத்துவச் செலவுகளுக்காக ரூ.50,000க்கும் மேல் பணம் எடுத்துச் செல்லலாம்; அதற்கான ஆவணங்களை வாட்ஸ்அப்பில் காண்பித்தால் போதும், அவ்வாறு காண்பித்தால் பணம் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுவர்.
மக்கள் உரிய ஆவணங்களுடன் ரூ.50,000க்கு மேல் கொண்டு செல்லலாம். பணம் எடுத்து செல்ல ரூ.50 ஆயிரம் விதிக்கப்பட்டுள்ள வரம்பை இன்னும் அதிகரிக்க கோரி, கோரிக்கைகள் வந்து இருக்கிறது. இதனை தேர்தல் கமிஷன் பார்வைக்கு நாங்கள் கொண்டு சென்றுள்ளோம். மக்களுக்கு தொந்தரவு அளிக்காத வகையில் பணத்தை பறிமுதல் செய்ய பறக்கும் படைக்கு அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறு அர்ச்சனா பட்நாயக் கூறினார்.
இவ்ளோ யாவாரம் செய்யறவங்களுக்கு UPI மூலம் பணப்பரிமாற்றம் செய்யத் தெரியாதா? யாரை யார் ஏமாத்துறாங்கோ?
முட்டாள்தனமான இந்த பரிசோதனையை முடிவுக்கு கொண்டு வாருங்கள். ஓட்டுக்கு கொடுக்கவேண்டிய பணம் ஏற்கனவே ஒவ்வொரு தொகுதிக்கும் போலீஸ் காரில் வந்துவிட்டது. மருத்துவமனைக்கான செலவு, கல்யான செலவிற்காக, நகை வாங்க செலவு என்று பலவற்றிக்காக பொதுமக்கள் எடுத்து செல்லும் பணத்தை பிடித்து அதிகாரிகள் பெரிய பாகிஸ்தான் சதிவேலையை தடுத்துவிட்டதை போன்று பிலிம் காட்டுகிறார்கள். இதனால் பொருளாதாரம் தான் பாதிக்கப்படுகிறது. ஒரு பெண்மணி அவர் வீட்டு வாடகைக்கு எடுத்துச்சென்ற அறுபதாயிரத்தை பிடித்து சைக்கோ அதிகாரிகள் தனது திறமையை காட்டி உள்ளார்கள். அறுபதாயிரத்தை வைத்து ஆறு குடும்பத்திற்கு கூட பணம் கொடுக்க முடியாது. முட்டாள்தனத்தின் உச்சக்கட்டம்.
டமில் நாட்டுல திருட்டு தீயமுக பண்ணுன மகா மோசடிகளினால் தேர்தல் ஆணையம் ரொட்டீன் விஷயங்களில் தலையிட்டு தினசரி நடவடிக்கைகளை நாசம் பண்ணிட்டு இருக்கு. அவனுங்க ஆம்புலன்ஸ் மோட்டார் சைக்கிள் மாட்டு வண்டி குதிரை வண்டி இதுல யெல்லாம் கொண்டு போயி பணம் பட்டுவாடா பண்றானுங்க. அது ஒரு பிரச்சினை இல்லாம நடக்குது. உ.பி. யில முன்பு மாயாவதி பூங்கா தோறும் நிறுவி வைத்திருந்த யானை சிலைகளை கோடிக்கணக்கான ரூபாய் செலவு பண்ணி பெரிய பெரிய துணி போட்டு மூடி யானை சின்னத்துக்கு ஓட்டு போட முடியாதபடி பண்ணிட்டோம் ன்னு சொன்னாய்ங்க. ஆனா டமில் நாட்டுல ராம் சாமி நாய்க்கன் சிலைகளை தேர்தல் வரைக்குமாவது மூடி வைக்க எதுவும் செய்யல. ஒரு வேளை ராம் சாமி நாய்க்கன் சிலைகள் யானை அளவுக்கு பெரிசா இருந்தா துணி போட்டு மூடுவாய்ங்க போல.
மேடம். நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட பறக்கும் படை எந்த சட்ட விதியை follow பண்டங்கனு தெரியல squad டீம் காவலர்கள் ஒவொரு பரிசோதனை செய்யும் காரின் கார் நம்பர், பயணிக்கும் நபர்களின் பெயர், எங்கேயிருந்து எங்கே போறீங்க, மொபைல் நம்பர், சில டீம் ஆதார் நம்பர் னு எல்லா தனிநபர் விவரங்களையும் ஒரு நோட் வைத்து காவலர் ஒருவரை வைத்து எழுதுகின்றனர். இந்த தனிப்பட்ட தனிநபர் விவரங்களை சேகரிக்க கன்டிப்பாக தேர்தல் ஆணையம் சேகரிக்க சொல்லியிருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் தனிநபர் தகவல்களை சேகரித்து நாகை, திருவாரூர் மாவட்ட காவலர்கள் எப்படி பாதுகாப்பாக தனிநபர் சம்பந்தப்பட்ட தகவல்களை அண்டர் Digital Personal Data Protection DPDP Act, 2023, இந்தச் சட்டம், இந்தியக் குடிமக்களின் தனிநபர் தரவுகளைச் பாதுகாத்து செயலாக்கும் இந்திய அரசு அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றை எவாறு பாதுகாத்து கையாள்வது, யார், எப்படி திரட்டப்படும் தகவல்களை கையாளவேண்டும் என சட்டம் வழிகாட்டுதல் தருகிறது. இப்படி இருக்க நாகை, திருவாருர் மாவட்ட காவல் துறை தனிநபர் விவரங்களை சட்டவிரோதமாக சேகரிக்கிறது. இந்த இரு மாவட்ட காவலர்கள் தகவல்களை வெளிநபர்களிடம் விற்று காசு பார்க்க வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆதலால் நாகை, திருவாரூர் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளருக்கு தக்க அறிவுரை வழங்க வேண்டிக்கொள்கிறேன்.
அந்த உரிய ஆவணம் எது
வழிப்பறி கொள்ளை கூட்டம்மேலும்
-
கலை நிகழ்ச்சிகளுடன் தேர்தல் விழிப்புணர்வு
-
ஓட்டுப்பதிவு பயிற்சி 256 பேர் 'ஆப்சன்ட்'
-
ஓ.எஸ்.ஆர்., நிலத்தை வளைக்க மீண்டும் முயற்சிக்கும் மர்ம நபர்கள்
-
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்திற்கு புதிய கட்டடம் அவசியம்
-
4 எம்.எல்.ஏ.,க்களை பழி தீர்த்த அமைச்சர்: தி.மு.க., வேட்பாளர் பட்டியலில் 'கல்தா'
-
குளவி கொட்டியதில் தொழிலாளி உயிரிழப்பு