செங்கல்பட்டில் ரூ.1 லட்சம் பறிமுதல்
செங்கல்பட்டு:ஆத்துாரில், ஆவணமின்றி காரில் எடுத்துச்செல்லப்பட்ட 1 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும்படையினர், நேற்று, பறிமுதல் செய்தனர்.
செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில், ஆத்துார் கிராமத்தில், பறக்கும்படை குழுவைச் சேர்ந்த நந்தினி தலைமையில், நேற்று, வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் காரில் வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கரி சஞ்சீவி ரெட்டி, 31 என்பவரிடம், ஆவணங்கள் ஏதுமில்லாததால், 1 லட்சத்து 6,340 ரூபாயை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை, செங்கல்பட்டு சார் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement