சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழா
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பாலமலை ரங்கநாதர் கோவிலில் சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழா கொடியேற்றம் இம்மாதம், 25ம் தேதி நடக்கிறது.
விழாவையொட்டி இம்மாதம், 24ம் தேதி கிராம சாந்தி நடக்கிறது. 25ம் தேதி சனிக்கிழமை கொடியேற்றம், 26ம் தேதி அன்ன வாகனம், 27ம் தேதி அனுமந்த வாகனம், 28ம் தேதி கருட வாகனம், 29ம் தேதி செங்கோதை அம்மன் அழைப்பு, 30ம் தேதி திருக்கல்யாண உற்சவம், புஷ்ப பல்லக்கு நிகழ்ச்சி நடக்கிறது. மே, 1ம் தேதி மாலை, 3:30 மணிக்கு யானை வாகன உற்சவம், 4:00 மணிக்கு சின்னத்தேர் உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
மே மாதம், 2ம் தேதி பரிவேட்டை, குதிரை வாகன உற்சவமும், 3ம் தேதி சேஷ வாகன உற்சவமும் நடக்கிறது. 4ம் தேதி சந்தன சேவை, சாற்றுமுறை தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ஜெகதீசன் செய்து வருகிறார்.
மேலும்
-
மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸ் மனு தள்ளுபடி
-
காரைக்குடியில் சைக்கிளில் வந்த விஜய்: பேசாமல் சென்றதால் தொண்டர்கள் ஏமாற்றம்
-
மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம்: பாஜ தாராள வாக்குறுதி
-
படித்தவர், படிக்காதவர் என அனைவருக்கும் அரசு வேலை; பிரசாரத்தில் அள்ளிவிட்ட சீமான்
-
ராஜ்யசபா எம்.பி.,யாக நிதிஷ் குமார் பதவியேற்பு
-
பண மூட்டை விவகாரம்; நீதிபதி யஷ்வந்த் வர்மா ராஜினாமா