ரூ.1.67 லட்சம் கையாடல் துணிக்கடை ஊழியர் கைது
திருப்போரூர்;திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கத்தில் தனியார் துணிக்கடை உள்ளது. இந்த கடையில், துாத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த செல்வபெருமாள், 28, என்பவர் துணை மேலாளராக வேலை செய்து வருகிறார். கடந்த, 23ம் தேதி செல்வபெருமாள் 1.67 லட்சம் ரூபாயை வங்கியில் செலுத்துவதாக எடுத்து சென்றவர் செலுத்தவில்லை. இதையறிந்த கடையின் மேலாளர் முருகன். 49, கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் செல்வபெருமாள் மீது வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement