18 தொகுதிகளில் தி.மு.க.,- பா.ஜ., நேரடி மோதல்
சென்னை: சட்டசபை தேர்தலில், 18 தொகுதிகளில், தி.மு.க., - பா.ஜ., இடையே நேரடி போட்டி உருவாகியுள்ளது.
தே.ஜ., கூட்டணியில் பா.ஜ.,வுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று தி.மு.க., போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் வெளியானது. மேலும், வேட்பாளர் பட்டியலையும் தி.மு.க., தலைவரான முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
இதையடுத்து, மயிலாப்பூர், அவினாசி, திருப்பூர் தெற்கு, கோவை வடக்கு, புதுக்கோட்டை, திருப்பத்துார், சாத்துார், திருச்செந்துார், வாசுதேவநல்லுார், ராதாபுரம், நாகர்கோவில், ஆவடி, திருவண்ணாமலை, தஞ்சை, திருவாரூர், மானாமதுரை, ராமநாதபுரம், ராசிபுரம் ஆகிய, 18 தொகுதிகளில், தி.மு.க., - பா.ஜ., இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
இதில், திருவண்ணாமலையில் அமைச்சர் வேலு, ஆவடியில் அமைச்சர் நாசர், ராசிபுரத்தில் அமைச்சர் மதிவேந்தன், ராதாபுரத்தில் சபாநாயகர் அப்பாவு ஆகியோரை, பா.ஜ., வேட்பாளர்கள் எதிர்கொள்ள உள்ளனர்.
மேலும்
-
தேர்தல் முடிந்தால் தான் விஜய்க்கு விபரம் புரியும்: இபிஎஸ்
-
2 தொகுதியில் விஜய் போட்டி; முன்பே சொன்னது தினமலர்!
-
இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அறிவிப்பு
-
'சீட் கிடைக்காத அக்கப்போர் பாலு வீட்டை ரவுண்டு கட்டிய உடன்பிறப்புகள்'
-
தவெக வேட்பாளர் பட்டியல் வெளியானது; பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி
-
நமக்கும், ஸ்டாலின் கூட்டணிக்கும் இடையே தான் போட்டி; வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் விஜய் பேச்சு