பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வசிக்கும் பகுதியை மேம்படுத்த ரூ.151 கோடி
பணியாளர் நலன்
மாநகராட்சியின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் எஸ்.சி., - எஸ்.டி., சமூகத்தினர், துாய்மை பணியாளர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு, கல்வி, நிதி, சுகாதாரம் சார்ந்த திட்டங்கள், பிற உதவிகளை வழங்க 334.99 கோடி ரூபாய் ஒதுக்கீடு. மேற்கண்டவர்களுக்கு, 'ஒன்டி மனே யோஜனா' திட்டத்தின் கீழ் ஐந்து லட்சம் ரூபாய் மானியம் வழங்க 71.64 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
எஸ்.சி., - எஸ்.டி., சமூகத்தினர், துாய்மை பணியாளர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் பகுதிகளை மேம்படுத்த 150.97 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர், மின்சார சக்கர நாற்காலிகள் வழங்க சாரதி திட்டத்தின் கீழ் 23.34 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
மாநகராட்சியின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் எஸ்.சி., - எஸ்.டி., சமூகத்தினர், துாய்மை பணியா ளர்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்கள், மாற்றுத்திறனாளிகள் குடும்ப குழந்தைகள் கல்விக்கு கட்டணம் செலுத்துவது, மடிக்கணினி வழங்குவது, பெண்கள் சுயதொழில் செய்ய திறன் மேம்பாட்டு பயிற்சி வழக்குவது, வெளிநாடு கல்வி உதவி உள்ளிட்டவைகளுக்கு 47.17 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
தெருவோர வியாபாரிகளுக்கு எலக்ட்ரிக் வாகனங்கள் வழங்க 13.35 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
கெம்பேகவுடா ஆய்வு மையம் மற்றும் அ ரசு மானியம் பெறும் நிறுவனங்களுக்கு நிதி உதவி வழங்க 10.50 கோடி ரூபாய் ஒதுக் கீடு.
மேலும்
-
இன்று இனிதாக (29.03.2026) விருதுநகர்
-
தாசில்தார் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை
-
கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதியில் தொடரும் புதுமுக வேட்பாளர் 'பார்முலா'
-
டாப்ஸ், சிறப்பு டெட் திட்டங்களால் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு செக் வைக்கும் தி.மு.க.,
-
கல்குவாரி, கிரஷர் லாரிகளால் 3 ஆண்டுகளில் 30 பேர் உயிரிழப்பு!
-
வேட்பாளர் பட்டியலுடன் கோவிலில் வழிபட்ட முதல்வர்