பெங்களூரு மேற்கு மாநகராட்சிக்கான முன்னுரை 

பி.பி.எம்.பி., என்ற, 'புருஹத் பெங்களூரு மாநகர பாலிகே' சகாப்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து, ஜி.பி.ஏ., என்ற, கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தை அரசு அமைத்தது. இந்த ஆணையத்தின் கீழ் சென்ட்ரல், கிழக்கு, வடக்கு, மேற்கு, தெற்கு என, ஐந்து மாநகராட்சிகளை பிரித்து, 369 வார்டுகளை ஒதுக்கி உள்ளனர். இதில், 112 வார்டுகளை உள்ளடக்கி, பெங்களூரு மேற்கு பெரிய மாநகராட்சியாக உருவாகியுள்ளது.

மாநகராட்சியின் வார்டுகள் எல்லாம், பசவனகுடி, டி.தாசரஹள்ளி, கோவிந்தராஜ்நகர், மகாலட்சுமி லே - அவுட், மல்லேஸ்வரம், பத்மநாபநகர், ராஜாஜிநகர், விஜயநகர், ஆர்.ஆர்.நகர் என, ஒன்பது சட்டசபை தொகுதிகளுக்குள் வருகின்றன. இந்த மாநகராட்சியின் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

Advertisement